/உள்ளூர் செய்திகள்/தேனி/பென்னிகுவிக் பிறந்தநாள் விழா; மணிமண்டபத்தில் கலெக்டர் ஆய்வுபென்னிகுவிக் பிறந்தநாள் விழா; மணிமண்டபத்தில் கலெக்டர் ஆய்வு
பென்னிகுவிக் பிறந்தநாள் விழா; மணிமண்டபத்தில் கலெக்டர் ஆய்வு
பென்னிகுவிக் பிறந்தநாள் விழா; மணிமண்டபத்தில் கலெக்டர் ஆய்வு
பென்னிகுவிக் பிறந்தநாள் விழா; மணிமண்டபத்தில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜன 12, 2024 06:34 AM
;
கூடலுார் : லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் பென்னிகுவிக்கின் பிறந்தநாள் விழா மற்றும் பொங்கல் விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து தேனி கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.
தென் தமிழக மக்களின் ஜீவாதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுவிக் 1841 ஜனவரி 15ல் பிறந்தார். ஒவ்வொரு ஆண்டும் இவரது பிறந்த நாள் விழா பொங்கல் விழாவாக விவசாயிகளும் பொதுமக்களும் கொண்டாடி. லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் அரசு விழாவாக கொண்டாட 2019ல் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஜனவரி 15ல் நடைபெற உள்ள பென்னிகுவிக் பிறந்தநாள் விழா மற்றும் பொங்கல் விழாவிற்கு வரும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார். கூடலுார் நகராட்சி தலைவர் பத்மாவதி, கமிஷனர் காஞ்சனா, தி.மு.க., நகர செயலாளர் லோகந்துரை, சுகாதார ஆய்வாளர் விவேக், நீர்வளத்துறை உதவி பொறியாளர் பிரேம் ராஜ்குமார் உடன் இருந்தனர்.