Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ சுங்கத்துறை பெயரில் மோசடி: விழிப்புடன் இருக்க எச்சரிக்கை

சுங்கத்துறை பெயரில் மோசடி: விழிப்புடன் இருக்க எச்சரிக்கை

சுங்கத்துறை பெயரில் மோசடி: விழிப்புடன் இருக்க எச்சரிக்கை

சுங்கத்துறை பெயரில் மோசடி: விழிப்புடன் இருக்க எச்சரிக்கை

UPDATED : ஜூன் 16, 2024 11:31 PMADDED : ஜூன் 16, 2024 11:27 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: 'சுங்கத் துறை பெயரில் அரங்கேறும் மோசடிகளில் ஏமாறாமல் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்' என, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபகாலமாக, சுங்கத் துறை அதிகாரிகள் பெயரில் நாடு முழுதும் பல்வேறு மோசடிகள் நடந்து வருகின்றன.

இவற்றில் சிக்கும் பொதுமக்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தவித்து வருவதும் தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில், இதுபோன்ற விஷயத்தில் ஏமாறாமல் கவனமுடன் இருக்கும்படி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:

வெளிநாட்டில் இருந்து அனுப்பப்பட்டுள்ள பரிசுப் பொருளுக்கு சுங்க வரி கட்ட வேண்டும் எனக் கூறி ஏராளமான பொதுமக்கள், போன் மற்றும் எஸ்.எம்.எஸ்., வாயிலாக ஏமாற்றப்படுகின்றனர்.

கொரியர் ஊழியர்கள், போலீஸ், சி.பி.ஐ., என பல்வேறு பெயர்களில் இந்த மோசடி நடந்து வருகிறது. உரிய பணம் செலுத்தாவிட்டால் சட்டரீதியாக சிக்கலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் மிரட்டப்படுகின்றனர்.

இது போன்ற போலி அழைப்புகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். பரிசுப் பொருட்கள் ஏதாவது அனுப்பப்பட்டு இருந்தால், சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு உண்மை நிலையை விசாரிக்க வேண்டும்.

மொபைல் போன் அழைப்புகளை நம்பாமல், பேசும் நபர்களை நேரில் சந்தித்து உண்மை நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். சந்தேகப்படும்படி இருந்தால், போலீசில் புகார் அளிக்கலாம்.

இது தொடர்பாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

செய்தித்தாள், ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் இது தொடர்பான எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. ஆகையால், சுங்கத் துறை அல்லது சுங்க அதிகாரிகள் பெயரில் நடக்கும் மோசடியில் சிக்காமல் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us