அரசுப் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா
அரசுப் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா
அரசுப் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா
ADDED : ஜன 12, 2024 12:09 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே காரணை பெரிச்சானுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, தமிழ் ஆசிரியர் மோகன்தாஸ் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சுரேஷ் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தரணிதரன் முன்னிலை வகித்தார். நல்லாசிரியர் விருது பெற்ற சென்னகுணம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அருணகிரி, பட்டதாரி ஆசிரியர் நாகராஜன் சிறப்புரையாற்றினர்.
மாணவர்களுக்கு தமிழ்ப் பாடம் குறித்து, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. நிறைவாக, போட்டியில் தேர்வான மாணவர்களுக்கு உதவி தலைமை ஆசிரியர்கள் இளையராஜா, அருண் ஆகியோர் பரிசளித்தனர். தமிழ் ஆசிரியர் பிரியா நன்றி கூறினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.