ADDED : ஜன 12, 2024 12:07 AM
கோவை:புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ., சார்பில், கோவை ரயில்வே ஸ்டேஷன் முன்பு ரயில்வே தொழிலாளர்கள் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்தனர்.
இந்த போராட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யூ., பொதுச்செயலாளர் கண்ணையா பேசினார். உண்ணாவிரத போராட்டத்தில், 1400 க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் பங்கேற்றனர்.