பிரதமர் மோடி வெளியிட்ட 13 நுால் 50 சதவீத விலையில் விற்பனை
பிரதமர் மோடி வெளியிட்ட 13 நுால் 50 சதவீத விலையில் விற்பனை
பிரதமர் மோடி வெளியிட்ட 13 நுால் 50 சதவீத விலையில் விற்பனை
UPDATED : ஜன 12, 2024 12:00 AM
ADDED : ஜன 12, 2024 11:07 AM
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புத்தக காட்சி நுால்கள், அரங்கு 440, 441ல் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.தமிழில் செம்மொழி இலக்கியமாக அறியப்படும், கி.மு. 300 முதல் கி.பி. 600 வரையில் உள்ள, இலக்கண, இலக்கிய நுால்கள், உரையுடன் கிடைக்கின்றன. இவற்றின் மொழிபெயர்ப்புகள், ஆய்வுகளும், ஒப்பீட்டாய்வும் கிடைக்கின்றன.எந்த அரங்கிலும் கிடைக்காத வகையில், நுால்கள் அனைத்தும் 50 சதவீத தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன. பிரதமர் மோடி, சமீபத்தில் காசியில் வெளியிட்ட 13 நுால்களும் இங்கு கிடைக்கின்றன. இந்தாண்டு பதிப்பிக்கப்பட்டுள்ள திருப்புடைமருதுார் ஓவியங்கள் நுால், கலை ஆய்வாளர்கள் விரும்பி வாங்கும் நுாலாக உள்ளது.சிந்துவெளி குறித்தும், தமிழ் எழுத்துகளின் வளர்ச்சி குறித்தும் ஆர்வம் காட்டுவோர், ஐராவதம் மகாதேவன் எழுதிய எர்லி தமிழ் எபிகிராபி எனும் நுாலை வாங்குகின்றனர். இலங்கை, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உள்ளோர், தங்களின் பவுத்த நண்பர்களுக்காக பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள மணிமேகலை உள்ளிட்ட நுால்களை வாங்குகின்றனர். பார்வையற்றோருக்காக, 25க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பிரெய்லி முறையில் அச்சிடப்பட்ட நுால்களும் உள்ளன.சங்க இலக்கியங்களில் உள்ள வட்டார வழக்கு சொற்கள், கலைச்சொற்கள், தாவரங்கள், விலங்குகள், பழங்குடிகள் பற்றிய ஆய்வு நுால்களையும் பலர் வாங்குகின்றனர்.