/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அவிநாசி கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் வினியோகம் எப்போது? சிவனடியார்கள், பக்தர்கள் எதிர்பார்ப்புஅவிநாசி கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் வினியோகம் எப்போது? சிவனடியார்கள், பக்தர்கள் எதிர்பார்ப்பு
அவிநாசி கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் வினியோகம் எப்போது? சிவனடியார்கள், பக்தர்கள் எதிர்பார்ப்பு
அவிநாசி கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் வினியோகம் எப்போது? சிவனடியார்கள், பக்தர்கள் எதிர்பார்ப்பு
அவிநாசி கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் வினியோகம் எப்போது? சிவனடியார்கள், பக்தர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 12, 2024 12:25 AM
அவிநாசி;அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் பிப்., 2ம் தேதி நடக்கிறது. இதற்காக திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, அம்மன் கோவில் மூலவர் விமானம், வெளி பிரகாரத்தில் கல் தளம் அமைத்தல், உள் பிரகாரத்தில் 63 நாயன்மார் பீடம் திருப்பணி, கோவில் யாகசாலை திருப்பணி உட்பட பல பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
கும்பாபிஷேகத்துக்கு இன்னும், 20 நாட்களே உள்ள நிலையில், இன்று வரை கோவில் பத்திரிகை பக்தர்களுக்கு வினியோகிக்கவில்லை. அவிநாசி கோவிலுக்கு கோவை, ஈரோடு, நீலகிரி உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் மக்கள் அதிக அளவில் தரிசனத்திற்காக வந்த வண்ணம் உள்ளனர்.
ஒரு மாதம் முன்னரே கும்பாபிேஷக பத்திரிகை வழங்கி இருந்தால், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரை கும்பாபிேஷகத்திற்கு அழைப்பதற்கு வசதியாக இருந்திருக்கும் என்று பக்தர்கள் ஆதங்கப்படுகின்றனர். கும்பாபிேஷக பூஜை நடைமுறை, 24ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கஜ பூஜை, கோ பூஜை ஆகியவற்றுடன் கும்பாபிஷேக ஹோமங்கள் துவங்குகிறது.
அதன்பின், பிப்., 2ம் தேதி காலை வரை, எட்டு யாக பூஜைகள் நடைபெற உள்ளது. தற்போது கும்பாபிஷேக பத்திரிகை பக்தர்களிடையே வினியோகிக்கப்பட்டு இருந்தால் நடைபெற உள்ள யாக வேள்வி பூஜையில் அனைத்து தரப்பு பகுதிகளிலிருந்தும் வந்து பக்தர்களும், சிவனடியார்களும் கலந்து கொள்வதற்கு வசதியாக இருந்திருக்கும்.
பத்திரிகை தாமதமாகி வருவது குறித்து, கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியனிடம் கேட்டபோது, ''பத்திரிகை அச்சடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும், 15ம் தேதி முதல் கும்பாபிஷேக விழா பத்திரிகை பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மூலம் வினியோகிக்கப்படும்,'' என்றார்.