/உள்ளூர் செய்திகள்/சென்னை/தெற்காசிய கராத்தே போட்டி தமிழக வீரர்கள் அசத்தல்தெற்காசிய கராத்தே போட்டி தமிழக வீரர்கள் அசத்தல்
தெற்காசிய கராத்தே போட்டி தமிழக வீரர்கள் அசத்தல்
தெற்காசிய கராத்தே போட்டி தமிழக வீரர்கள் அசத்தல்
தெற்காசிய கராத்தே போட்டி தமிழக வீரர்கள் அசத்தல்
ADDED : ஜன 12, 2024 12:53 AM

சென்னை,
புதுடில்லி, டால்கடோரா உள்விளையாட்டு அரங்கில், கடந்த 6, 7ம் தேதிகளில், தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன.
ஷிகான் சசிகுமார் தலைமையில் இந்திய அணிக்காக பங்கேற்ற வீரர்களில், தமிழக வீரர்கள் 10 தங்கம், மூன்று வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என, மொத்தம் 26 பதக்கங்களை வென்று அசத்தினர்.
ஆலன் அலஸ்டர், ஸ்ரீவத், யாஷ்மிதா ஆகியோர் தலா இரண்டு தங்கமும், கார்த்திக், சரத்குமார், விஷால் மற்றும் கவுஷிக் ராம் ஆகியோர் தலா ஒரு தங்கமும் வென்றனர்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு, சர்வதேச கராத்தே தலைமை இயக்குனர் கென்ஜி ஓஹ்யாமா பரிசுகளை வழங்கினார்.
பதக்கங்களைக் குவித்த தமிழக அணி வீரர்களுக்கு, சென்னை ரயில் நிலையத்தில், கராத்தே சங்க கவுரவ தலைவர் பாஸ்கர், தலைவர் அன்சார் பாஷா மற்றும் பெற்றோர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.