தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 50
தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 50
தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 50
ADDED : ஜன 12, 2024 05:25 PM

ஜீமுதன் கீசகன்
காளியின் தரிசனத்தை தொடர்ந்து பாண்டவர்கள் மச்சநாட்டுக்குச் சென்று விராடனை சந்தித்து தங்களை அங்கே ஒளித்துக் கொண்டனர். தர்மதேவனின் வரமும், காளியின் அருளும் பாண்டவருக்கு துணையாக இருந்தது.
ஆறுபேருமே பாண்டவர்களிடம் பணியாற்றியதாக கூறிக் கொண்டனர். விராடன் அவர்களை ஏற்றுக் கொண்டான். அங்கு அவர்களுக்கு சில சோதனை, சவால்கள் உண்டாயின. பீமனுக்குத் தான் முதலில் சோதனை ஏற்பட்டது.
விராட நாட்டில் 'சங்கர மகோத்ஸவம்' என்ற விழா நடைபெறுவது வழக்கம். அப்போது கலை நிகழ்ச்சிகள், கழைக்கூத்து, மல்யுத்தப் போட்டிகள் நடைபெறும். அதில் உடல்பலம் மிகுந்த வீரர்கள் கலந்து கொண்டு கொக்கரிப்பர். வெற்றி பெற்றால் பரிசுகள் குவியும். போட்டியில் காலகேயர்கள்
என்ற அசுர இனத்தைச் சேர்ந்தவர்களே
அதிகம் இடம் பெறுவர். அவர்களில்
அசகாய சூரனாக கருதப்பட்டவன் தான் 'ஜீமுதன்' என்ற மல்லன். இவனை
ஒருவரும் வெற்றி கொண்டதில்லை.
இவனும் மச்ச தேசத்தவர்களை பார்த்து இழித்தும் பழித்தும் பேசுவான்.
''மச்ச நாட்டு மக்களே! நீங்கள் எதற்காக உயிர் வாழ்கிறீர்கள்? உங்கள் வாழ்வில் வீரத்திற்கு இடமுண்டா இல்லையா? '' என மல்யுத்த களத்தில் நின்று கொண்டு அவன் கொக்கரித்ததை கேட்ட விராட மன்னனுக்கு அவமானமாகப் போனது. அவன் முகம் மிகவே வாடியது. அப்போது அந்த ஜீமுதன் ஒரு அறிவிப்பு செய்தான்.
''என்னை யாராவது வென்றால் அவனுக்கு காலம் எல்லாம் அடிமையாக இருப்பேன். என் பரிசுகளையும் அவனுக்கு அளித்து விடுவேன்'' என்றான்.
பீமனும் அங்கு வந்திருந்தான். 'வல்லன்' என்ற பெயரில் சமையல் காரனாக வேடத்தில் இருந்தவன் ஜீமுதனின் கொக்கரிப்பைக் கேட்டு வெகுண்டான். ஜீமுதனோடு மோதிட விராடனிடம் அனுமதி வேண்ட அவனும் சம்மதித்தான். களத்தில் குதித்த பீமன் ஜீமுதனுடன் மோதத் தொடங்கினான். முதலில் குத்துக்களை பெற்றுக் கொண்டு தோற்பவன் போல நடித்தான். அதன்பின் பதிலடி கொடுக்கத் தொடங்கினான். ஜீமுதன் அடி தாங்காமல் மயங்க, அவனை அப்படியே வீசி எறிந்தான். அதன்பின் அவன் தனக்கு அடிமையாக இருக்கச் சம்மதித்த போது, ''அகந்தையை கைவிடு'' என்ற பீமனை விராட மன்னனுக்கு பிடித்து விட்டது.
பீமன் ஒருபுறம் விராடனிடம் நற்பெயர் எடுத்திட, அர்ஜுனன் பிருகன்னளை என்னும் பெயரில் அரவாணியாக மாறி விராடனின் மனைவி, மகளுக்கும் நடனம் கற்றுத் தந்து அவர்களைக் கவர்ந்தான். அவனுக்கும் அந்த களத்தில் ஒரு போட்டி உருவானது. ஒரு நாட்டிய மங்கை தனக்கிணையாக ஆட யாருமில்லையா என கேட்டாள். அப்போது அர்ஜுனன் ஆடி அவளை வென்று விராடனின் மானத்தைக் காப்பாற்றினான்.
இதே போன்ற நிலை தர்மனுக்கும் ஏற்பட்டது. சூதாட்டத்தில் விராடன் ஆயிரம் மாடுகளைத் தோற்றுவிட்டான். விராடன் சார்பாக விளையாடி தர்மனே மாடுகளை மீட்டான். தொடர்ந்து சூதாடச் சொன்ன போது மறுத்து சூதாடினால் வாழ்வு வீணாகும். அதற்கு என் குருநாதர் தர்மனே நல்ல உதாரணம் என தன்னையே உதாரணமாக விராடனிடம் காட்டினான். விராடனும் அதைக் கேட்டு சிலிர்த்தான். சகாதேவனும், நகுலனும் கூட குதிரைகளைப் பேணுவதிலும், மாடுகளை மேய்ப்பதிலும் தனித்திறமையைக் காட்டினர்.
சைந்தரி என்ற பெண்ணாக திரவுபதி ராஜமகளிர்க்கெல்லாம் அலங்காரக் கன்னியானாள். அவளால் சராசரியாக இருந்த பெண்கள் எல்லாம் தேவகன்னியராக மாறி வியப்பளித்தனர்.
மொத்தத்தில் ஆறுபேரும் எவரும் அறியாதபடி பலவித தன்மை கொண்ட வாழ்க்கை வாழ்ந்து அதை உலக மக்களுக்கு உதாரணமாகவும் ஆக்கினர். துரியோதனன் ஆட்களோ அவர்களை வலைவீசி தேடிக் கொண்டிருந்தனர் நாட்கள் இப்படியா நகர்ந்திடும்?
கீசகன் என்ற விராடனின் சேனாதிபதியும் மைத்துனனுமானவன் திரவுபதி மீது காதல் கொண்டான். திரவுபதியின் அழகு அவனைக் கொள்ளை கொண்டது. சுற்றிச் சுற்றி வந்தான்.
''சைந்தரி... உன் பெயரை சுந்தரி என மாற்றிக் கொள். தேவலோகத்து ரம்பை, ஊர்வசியும் உன் முன்னால் தாழ்ந்தவர்களே'' என அவளிடம் வழியாய் வழிந்தான்.
திரவுபதி அவனிடம், ''நான் மணமானவள். என்னிடம் இப்படி எல்லாம் பேசக் கூடாது அது பண்பல்ல'' என்று கூறிப் பார்த்தாள்.
''பண்பாடு எல்லாம் ராஜகுலத்து ஆடவருக்கு இல்லை. அவர்கள் பார்வை ஒரு பெண் மீது பட அந்த பெண் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நீ கொடுத்து வைத்தவள்'' என்றான். திரவுபதியோ அவள் பார்வையிலேயே படாதபடி விலகி விலகிப் போனாள். அவனோ துரத்தினான். திரவுபதி ஒரு கட்டத்தில் ராணி சுதட்சணையிடம்,
''ராணி... உங்கள் சகோதரர் வரம்பு மீறுகிறார். அவரிடம் கூறுங்கள் நான் ஒரு பணிப்பெண். உங்கள் தலையை வாரிப் பின்னும் சாமான்யப்பட்டவள். என் மீது ஆசைப்படுவது அவர் பதவிக்கு அழகல்ல'' என்றாள். ஆனால் சுதட்சணை அதை பொருட்படுத்தவில்லை.
''சைந்தரி... உன் மீது ராஜபார்வை விழ கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதிலும் என் சகோதரன் மாவீரன். அவன் விருப்பத்திற்கு இணங்கினால் எதுவும் ஆகி விடாது. நீ ராஜப்பிரசாதமாகத் தான் கருதப்படுவாய்'' என சுதட்சணை வினோத நியாயத்தை பேசினாள். திரவுபதி குழம்பிப் போனாள். பின் ஒரு உபாயம் கண்டறிந்தாள்.
''ராணி... என்னை ஐந்து கந்தர்வர்களும் விரும்பினர். நான் அவர்களையும் மறுதலித்தேன். ஆனாலும் அவர்கள் இன்றும் என்னைத் தொடர்ந்து விரும்புகின்றனர். அதே சமயம் நான் சம்மதிக்காத நிலையில் அவர்கள் என்னைத் தீண்டாது காவல் காத்து வருகின்றனர். கீசகனின் பார்வை என் மீது படுமானால் அவர்கள் நேரில் தோன்றி யுத்தம் புரிவர். மானுடரான கீசகரால் கந்தர்வர்களை வெல்ல முடியுமா? யோசியுங்கள்'' என்று சுதட்சணையை பயமுறுத்தினாள் திரவுபதி.
சுதட்சணையும் இந்த செய்தியை கீசகனிடம் கூறினாள். ''அண்ணா... நீ அந்த பணிப்பெண்ணை மறந்து விடு. அவளை கந்தர்வர்கள் காவல் காக்கின்றனர்'' என்றாள். கீசகனோ அதை கேட்கத் தயாரில்லை.
'''என்ன பெரிய கந்தர்வர்கள்? அவர்களுடன் யுத்தம் புரியச் சித்தமாக உள்ளேன். எனக்கு அவள் கிடைத்தாக வேண்டும்''
'''இது காதல் அல்ல. காமம்! காமத்தால் யாரும் நற்கதி அடைந்ததில்லை. அவர்கள் நரகத்தில் தான் உழன்றுள்ளனர். எனவே இந்த சகோதரி சொல்வதைக் கேள். வீணாக உயிரை இழக்காதே'' என்ற சுதட்சணையை கீசகன் லட்சியமே செய்யாமல், ''சகோதரி... எப்பாடுபட்டாவது என் அந்தப்புரத்துக்கு அவளை அனுப்பி வை. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன். எந்த மயிலிடமும் இறகுக்காக கெஞ்சிக் கொண்டிருக்க முடியாது'' என்று கூறிய கீசகன் வேகமாய் அங்கிருந்து புறப்பட்டு விட்டான்.
சுதட்சணைக்கும் வேறு வழி தெரியாத நிலையில், ''சைந்தரி நீ என் சகோதரன் இல்லத்துக்கு சென்று அவன் தரும் பொருட்களை பெற்று வா''என்றாள். ஆனால் திரவுபதி தயங்கினாள். சுதட்ணையும் அது புரிந்தவளாக, ''சைந்தரி... என் சகோதரனிடம் எவ்வளவோ பேசிப் பார்த்து விட்டேன். ஆனால் அவன் உன் மீது மன்மதனுக்கு ரதி மீதிருக்கும் காதல் போல் காதல் கொண்டவனாயிருக்கிறான். அவன் மாவீரன். என் பெற்றோருக்குப் பிறந்த நுாறு பேர்களில் அவனே முதலானவன். மந்தாரம், மேகலம், திரிகர்த்தம், தசார்ணம், கசேருகம், மாலவம், யவனம், சிலிந்தம், காசி, கோசலம், கரதம், நிஷித்தம், சிவம், மூசுலகம், புளிந்தம், கலிங்கம், தங்கணம், பரதங்கணம்
என்னும் 18 நாடுகளை ஜெயித்து அந்த நாடுகளை அடிமைப்படுத்தி என் கணவரான விராடனிடம் பெரும் மதிப்போடு இருப்பவன். உனக்கு அவனிடம் பணிந்து செல்வதைத் தவிர வேறு வழி இல்லை'' என்றான் சுதட்சணன். திரவுபதி அடுத்த நொடியே கிருஷ்ணனையும், தன்னை வழிநடத்தும் சூரியனையும் மனதிற்குள் பிரார்த்தனை செய்து விட்டு கீசகன் இருக்கும் இடம் நோக்கி செல்லத் தொடங்கினாள்.
-தொடரும்
இந்திரா செளந்தர்ராஜன்
98947 23450