ADDED : ஜன 12, 2024 12:04 AM
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அடுத்த கோட்டப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வி.ஏ.ஓ., முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் சங்கர் தலைமை தாங்கினார். வி.ஏ.ஓ., குமரவேல் வரவேற்றார்.
மேல்மலையனுார் தாசில்தார் முகமது அலி, இயற்கை வாழ்வியலின் அவசியம் குறித்து பேசி, கட்டுரை , ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன், வி.ஏ.ஓ.,க்கள் காளிதாஸ், ராமமூர்த்தி, ஆசிரியர்கள் கிராம மக்கள் பங்கேற்றனர்.