/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/டவுன் பஞ். ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனைடவுன் பஞ். ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
டவுன் பஞ். ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
டவுன் பஞ். ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
டவுன் பஞ். ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
ADDED : ஜன 12, 2024 12:38 AM
நாகர்கோவில்:குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த இரணியல் நேதாஜி நகரை சேர்ந்தவர் குமாரதாஸ், 47. திங்கள்சந்தை டவுன் பஞ்., அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன், நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள டவுன் பஞ்., உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார்.
இவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி, 81 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்திருந்ததை கண்டறிந்தனர்.
இதையடுத்து குமாரதாஸ் மற்றும் அவரது மனைவி சுஜாதா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நேற்று காலை லஞ்ச ஓழிப்பு ஏ.டி.எஸ்.பி., ஹெக்டோர் தர்மராஜ், இன்ஸ்பெக்டர் ஜான் பெஞ்சமின் தலைமையிலான போலீசார், குமாரதாஸ் வீட்டிற்கு சென்று, சில முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் குமாரதாசிடம் விசாரணை நடைபெற்றது. காலை தொடங்கிய சோதனை மதியம் வரை நீடித்தது.