ADDED : ஜன 12, 2024 12:36 AM

அருப்புக்கோட்டை: அரசு நல திட்ட உதவிகளை கட்சிகள் பாரபட்சமின்றி, அனைத்து மக்களும் பெற வேண்டும் என்ற உறுதியில் முதல்வர் உள்ளார் என, அரசு விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.
அருப்புக்கோட்டையில் நடந்த பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் விழாவிற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.
தொகுப்புகளை வழங்கி அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது : கட்சி பாரபட்சமின்றி அனைத்து மக்களும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்.
அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகருக்கு பிப். 15க்குள் புதிய தாமிரபரணி குடிநீர் திட்ட விநியோகத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைவில் நடக்க உள்ளது. என்றார்.