எஸ்.ஐ., வீட்டில் திருட்டு: இரண்டு பெண்கள் கைது
எஸ்.ஐ., வீட்டில் திருட்டு: இரண்டு பெண்கள் கைது
எஸ்.ஐ., வீட்டில் திருட்டு: இரண்டு பெண்கள் கைது
ADDED : ஜன 11, 2024 11:40 PM
உத்தரகன்னடா: உத்தரகன்னடா, அங்கோலாவின், கோட்டேவாடா சாலையில் வசிக்கும் சுமித்ரா என்ற மஞ்சுளா, டெய்லரிங் தொழில் செய்கிறார். இவரது கணவர் அங்கோலா போலீஸ் நிலையத்தில், எஸ்.ஐ.,யாக பணியாற்றுகிறார்.
சில நாட்களுக்கு முன், சுமித்ரா 1.30 லட்சம் மதிப்புள்ள 34 கிராம் எடையுள்ள வளையல், 15,000 ரூபாய் மதிப்புள்ள 3 கிராம் எடையுள்ள மோதிரத்தை, மேஜை மீது வைத்திருந்தார். இது திருடு போனது. அங்கோலா போலீஸ் நிலையத்தில், புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்திய போலீசார், ரோமானா மவுலாலி, 32, சுமேதா திகம்பர மகாலே, 27, ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்கள் இருவரும், துணி தைத்துக்கொள்ள அவ்வப்போது சுமித்ரா வீட்டுக்கு வந்தனர். அவர் மேஜை வைத்திருந்த தங்க நகைகளை திருடி சென்றனர்.
இவற்றை தனியார் நிதி நிறுவனம் ஒன்றில், அடமானம் வைத்து பணம் பெற்றதை, விசாரணையில் ஒப்புக்கொண்டனர். நகைகள் மீட்டு சுமித்ராவிடம் ஒப்படைக்கப்பட்டன.