Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பொன் எழுத்துக்களால் பொறிக்கும் முடிவு பா.ஜ., தலைவர் விஜயேந்திரா நம்பிக்கை

பொன் எழுத்துக்களால் பொறிக்கும் முடிவு பா.ஜ., தலைவர் விஜயேந்திரா நம்பிக்கை

பொன் எழுத்துக்களால் பொறிக்கும் முடிவு பா.ஜ., தலைவர் விஜயேந்திரா நம்பிக்கை

பொன் எழுத்துக்களால் பொறிக்கும் முடிவு பா.ஜ., தலைவர் விஜயேந்திரா நம்பிக்கை

ADDED : ஜன 11, 2024 11:45 PM


Google News
பெங்களூரு: ''காங்கிரஸ் அரசின் தோல்விகளை விளக்கி, பா.ஜ., வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதற்கு, தொண்டர்கள் காத்திருக்கின்றனர். வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட கூடிய வகையில், தேர்தல் முடிவுகள் வெளியாகும்,'' என மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.

லோக்சபா தேர்தல் தொடர்பாக, மண்டல வாரியாக பா.ஜ., தலைவர்கள் நேற்று முன்தினம் ஆலோசனையை துவக்கினர். முதல் நாளில், 14 தொகுதிகள் குறித்தும், இரண்டாவது நாளான நேற்று 14 தொகுதிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டன.

சம்பந்தப்பட்ட தொகுதிகளின் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட தலைவர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள்பங்கேற்றனர். முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சதானந்தகவுடா, பசவராஜ் பொம்மை உட்பட மூத்த தலைவர்களும் ஆலோசனை வழங்கினர்.

கூட்டத்துக்கு பின், மாநில தலைவர் விஜயேந்திரா கூறியதாவது:

மாநிலத்தின் 28 லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. நாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. மீண்டும் மோடி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைவது உறுதி.

காங்கிரஸ் அரசின் தோல்விகளை விளக்கி, பா.ஜ., வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதற்கு, தொண்டர்கள் காத்திருக்கின்றனர். வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட கூடிய வகையில், தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

தாமதம் செய்யாமல், விரைவில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். இது குறித்து, புதுடில்லி சென்று கட்சி தலைவர்களுடன் ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us