Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ரசிகர்களை வசப்படுத்திய மனஸ்வினி

ரசிகர்களை வசப்படுத்திய மனஸ்வினி

ரசிகர்களை வசப்படுத்திய மனஸ்வினி

ரசிகர்களை வசப்படுத்திய மனஸ்வினி

ADDED : ஜன 12, 2024 12:53 AM


Google News
Latest Tamil News
மேடையை வணங்கி, தன்னுடைய நடன நிகழ்ச்சியை, ஷாரதா புஜங்கம் என்ற உருப்படி வழியே ஆரம்பித்தார் நாட்டிய கலைஞர் மனஸ்வினி.

சங்கராசாரியார் இயற்றிய வரிகளை, ராகமாளிகை, ராக வர்ணத்தை அழகுநடையும் புன்னகையும் ததும்ப ஆரம்பித்தார். ஜதிகளின் ஒலியை, ரேவதி ராமசந்திரன் வல்லின மெல்லினமாய் கூற, அடவுகளிலும் அதை மென்மையை அழகாக நடமிட்டு காட்டினார்.

'எந்தன் சாமியே நின்னையே கதி என்று கிடக்கிறேன்' என, நாயகனுக்கு உணர்த்த மண்டி அடவுகளும், திதிதைகளும் கோர்வையாய் அலங்காரம் தொடுக்க, ஒவ்வொரு ஜதியும், சஞ்சாரியை அழகுபடுத்தி பிரித்துக்காட்டின. தஞ்சையில் வீற்றிருக்கும் பெருமானே உனக்கு என் பக்தியையும், அன்பையும் என விவரித்தது, அடுத்த சஞ்சாரி. மானும் மழுவும் ஆட முத்தாயிஸ்வரம் அடவுகள் அமைய, 'விரகதாபத்திற்கு என்னை கொண்டு செல்லாமல் விரைந்து வாரும் அய்யா' என சரணம் ஆரம்பித்தது.

சரண ஸ்வரமும், ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு ஜதியும் அமைந்து மேலும் மெருகூட்ட மார்க்கண்டேயன், நீலகண்டன் கதையை, ரத்தின சுருக்கமாக கூறி, வேதங்களை த்ரிபுர சம்ஹாரா மூர்த்தியை கண்முண்ணே நிறுத்தி, தியானத்தில் அமர்ந்து நிறைவு செய்தார் மனஸ்வினி.

தொடர்ந்து, மனோகர் பாலசந்திரனின் மிருதங்கத்தோடு, சுத்த நிருத்தமான ஆலய சம்பரதாய உருப்படி துவங்கியது ஆதிதாளத்தில்.

மிருதங்கமும், சதங்கையும் தகதிமியில் கணக்குகளை உருவாக்கி, கார்வைகளால் அலங்கரித்து துரிதகால தீர்மானங்களை கொண்டு நிறைவு செய்தனர்.

இறைவனை அவசர அவசரமாக வணங்குவதும், சொத்து சேர்த்து வைப்பதும் தேவை இல்லை. நாம், மன நிலையை சமன்படுத்தி உண்மையான பக்தியால் மனமென்னும் கோவில், சிந்தனை என்னும் ஆற்றலில் இறைவனை நினைத்தாலே போதும் என்பதை, மாண்ட் ராக பஜனோடு நிகழ்த்தினார்.

ராமகிருஷ்ண பக்தியில் ஆனந்தமாய் ஆடி, ஸ்ரீவெங்கடேஷ்வர குப்புசாமி அற்புத குரலிசையோடு நிகழ்ச்சி நிறைவடைந்தும், ரசிகர்களின் இசை இன்பத்தில் இணைந்தார் மனஸ்வினி.

மயிலாப்பூர் தக் ஷிணாமூர்த்தி ஹாலில் தன்னுடைய நிகழ்ச்சியால், அனைவரையும் வசப்படுத்தி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

-மா.அன்புக்கரசி,

மாணவி, தமிழ்நாடு கவின் கலை மற்றும் இசை பல்கலை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us