Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம்!

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம்!

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம்!

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம்!

Latest Tamil News
புதுடில்லி: அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ஏவுகணையை, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஏவியதும், அதை நமது வான் பாதுகாப்பு அமைப்பான எஸ்-400 மூலம் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியதும், இப்போது தெரியவந்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, இந்தியா மீது பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதற்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர்.

அப்போது, இந்தியாவுக்கு எதிராக என்னென்ன ஆயுதங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது என்ற விவரங்கள், வெளியாகி வருகின்றன.

அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் என்ற ஏவுகணையை பாகிஸ்தான் பயன்படுத்தியதை இந்திய இராணுவம் உறுதி செய்துள்ளது. இந்த ஷாஹீன் ஏவுகணையை, தரையிலிருந்து ஏவ முடியும். இது மார்ச் மாதம் 2015ல் முதன்முறையாக சோதனை செய்யப்பட்டது.

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணையை, பாகிஸ்தான் ராணுவம், இந்தியா மீது ஏவியுள்ளது. ஆனாலும் இந்திய பாதுகாப்பு படையினர், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ் 400 சுதர்சன சக்கரம் எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் அதை துல்லியமாக சுட்டு வீழ்த்தினர்.

இதன் மூலம், பாகிஸ்தான் பெரிதாக நம்பியிருக்கும் ஷாஹீன் ஏவுகணை, இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் எளிதில் சுட்டு வீழ்த்தப்படக் கூடியது என்ற உண்மை அம்பலம் ஆகியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us