/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வழிப்பறியை தடுக்க வேண்டும் ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கைவழிப்பறியை தடுக்க வேண்டும் ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை
வழிப்பறியை தடுக்க வேண்டும் ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை
வழிப்பறியை தடுக்க வேண்டும் ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை
வழிப்பறியை தடுக்க வேண்டும் ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை
ADDED : ஜூலை 13, 2011 01:34 AM
கடலூர் : கடலூரில் அதிகரித்து வரும் வழிப்பறி மற்றும் திருட்டை தடுத்து
நிறுத்த வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கடலூர் ஒன்றிய கூட்டம் நடந்தது.
ஒன்றியத் தலைவர் மச்சகாந்தி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சிவகாமி,
செங்கேணி, விஜயா, பாக்கியம், சசிகலா, செல்வி, மீனாட்சி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலர் மேரி துவக்க உரையாற்றினார். பின்னர் புதிய நிர்வாகிகள்
தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் பொருளாளர் வளர்மதி உட்பட பலர்
பங்கேற்றனர். கடலூர் நகரில் அதிகரித்து வரும் வழிப்பறி மற்றும் திருட்டை
தடுத்து சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். ஐம்பதுக்கும் மேற்பட்ட
குடியிருப்பு நகர்கள் உள்ள கோண்டூர் பகுதியில் போலீஸ் நிலையம் அமைக்க
வேண்டும். இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.