/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பிப்.,2ல் நடக்கிறது கிட்டீஸ் தடகளம்பிப்.,2ல் நடக்கிறது கிட்டீஸ் தடகளம்
பிப்.,2ல் நடக்கிறது கிட்டீஸ் தடகளம்
பிப்.,2ல் நடக்கிறது கிட்டீஸ் தடகளம்
பிப்.,2ல் நடக்கிறது கிட்டீஸ் தடகளம்
ADDED : ஜன 12, 2024 12:38 AM
கோவை;மாவட்ட அளவில் சிறுவர்களுக்கான தடகளப்போட்டிகள் பிப்.,2ம் தேதி பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது.
'தி அமெச்சூர் அதலெடிக் டோர்னமென்ட் அசோசியேஷன் ஆப் கோயம்புத்துார்' சார்பில் 36வது 'கிட்டீஸ் அதலெடிக் மீட்' மற்றும் 'ஜி வரதராஜ் நினைவு ஸ்போர்ட்ஸ் மீட்' பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது.
கோவை வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு, 6, 8, 10, 12 வயது பிரிவுகளின் அடிப்படையில் 50மீ., 60மீ., 80மீ., 100மீ., 200மீ., 300மீ., 600மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தொடர் ஓட்டம், சாப்ட் பால் எறிதல், தடை ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ஒவ்வொரு மாணவரும் தலா இரண்டு போட்டிகளில் பங்கேற்கலாம். பங்கேற்கும் மாணவ மாணவியர், பள்ளி தலைமையாசிரியரின் ஒப்புதலுடன் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு நகல் சமர்ப்பிக்க வேண்டும்.
பங்கேற்க விரும்புவோர், நுழைவு கட்டணம் ரூ.40 மற்றும் மாணவர்களின் விபரங்களை 'வெள்ளிங்கிரி, கிட்டீஸ் மீட் ஒருங்கிணைப்பாளர், பி.எஸ்.ஜி., சர்வஜனா மேல்நிலைப்பள்ளி, பீளமேடு, கோவை 641 004' என்ற முகவரிக்கு ஜன.,27ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
வெற்றி பெறும் மாணவர்களுக்கு கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.