பிப்ரவரி முதல் வாரத்தில் காஞ்சியில் புத்தக திருவிழா

UPDATED : ஜன 12, 2024 12:00 AM
ADDED : ஜன 12, 2024 10:56 AM
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த 2022 டிசம்பர் மாதம், முதன்முதலாக புத்தக திருவிழா, மாவட்ட நிர்வாகம் சார்பில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடத்தப்பட்டது.இந்த புத்தக திருவிழாவில், 1 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். 10 நாட்கள் நடந்த புத்தக திருவிழாவில், மணல் சிற்பம், செல்பி பாய்ன்ட், சிறுவர்களுக்கான விளையாட்டு, உணவகம் போன்றவை இடம் பெற்றிருந்தன.மேலும், பள்ளி மாணவர்களின் திறமைகள் வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில், நடப்பாண்டும் புத்தக திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இதற்கான அனைத்து துறை ஆலோசனை கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது. பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில், கலெக்டர் வளாகத்தில், புத்தக திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.