Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சான்றோரின் பழக்க வழக்கங்களைக் கடைபிடிப்பது அவசியம் என ஆண்டாள் அறிவுறுத்தியுள்ளார் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம் 

சான்றோரின் பழக்க வழக்கங்களைக் கடைபிடிப்பது அவசியம் என ஆண்டாள் அறிவுறுத்தியுள்ளார் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம் 

சான்றோரின் பழக்க வழக்கங்களைக் கடைபிடிப்பது அவசியம் என ஆண்டாள் அறிவுறுத்தியுள்ளார் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம் 

சான்றோரின் பழக்க வழக்கங்களைக் கடைபிடிப்பது அவசியம் என ஆண்டாள் அறிவுறுத்தியுள்ளார் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம் 

ADDED : ஜன 11, 2024 11:56 PM


Google News
புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் மார்கழி மாதத்தையொட்டி உபன்யாசம் செய்து வருகின்றார்.

திருப்பாவையின் 26 ம் பாசுரம் குறித்து நேற்று அவர் உபன்யாசம் செய்ததாவது:

திருப்பாவையின் 26ம் பாசுரத்தில், மாலே என்றும் மணிவண்ணா என்றும் நாராயணனை ஆண்டாள் போற்றி பாசுரத்தைத் தொடங்குகின்றாள் ஆண்டாள் .திருப்பாவையின் 30 பாசுரங்களில் இந்த 26ம் பாசுரத்தில் மட்டும் தான் எம்பெருமானின் திருநாமங்களை அடுத்தடுத்த சொற்களாக அமைத்து இரண்டு முறை போற்றப்பட்டுள்ளது என்பதும் இந்தப் பாசுரத்திற்கு ஏற்றம். வைணவ சித்தாந்தப்படி, தத்துவங்களின் வரிசையில், 26வது தத்துவம் பரமாத்மாவைக் குறிக்கும்.

இந்தப் பாசுரத்தில்,.மாலே என்பது பகவானையும், அவன் எளிமையையும், கருணையையும், குறிக்கின்றது. எம்பெருமானிடம் செலுத்தும் அன்பைக் காட்டிலும் பல ஆயிரம் மடங்கு அன்பை எம்பெருமான் அடியவர்களிடம் காட்டுவான்.

திருப்பாவையின் முதல் பாசுரத்தில் மார்கழி மாதத்தின் மேன்மையை உள்ளுரைப் பொருளாகவும், முதல் பாசுரத்தில் நீராட என்ற சொல்லிற்கு, க்ருஷ்ணானுபவம் என்ற தடாகத்தில் மூழ்கி நீராட என்றும் உள்ளுரைப் பொருள் உணரும் வகையில் அந்தச் சொற்கள் உள்ளன.

இந்த 26ம் பாசுரத்தில் மார்கழி நீராடுவான்என்ற சொற்கள் அதற்கு நேர் மாறாக வேறு பொருளை உள்ளுரைப் பொருளாக உணரும் படியாக ஆண்டாள் அருளியுள்ளாள்.

மார்கழி என்பதை, மார்கழி என்று பிரித்துப் பொருள் கொண்டால், அகங்கார மமகாரங்களைக் கழித்து என்று உள்ளுரைப் பொருள் அனுபவிக்கலாம். மார் என்றால் அகங்கார மமகாரங்கள். இவ்வாறு, 26ம் பாசுரத்தில் வரும் மார்கழிஎன்ற சொல், நான் எனும் எண்ணம் நீங்கி, நாராயணனைச் சரணாகதி பண்ண நம்மைத் தயார் படுத்திக் கொள்வதாகும்.

முன்னோர் மொழிந்த மொழி தவறாமல் நாம் எம்பெருமானை அடையும் வழிகளைத் தொடர வேண்டும் என்று ஆண்டாள் சொல்லுகிறாள்.

அத்துடன்பாரம்பரியப் பெருமைகளைக் கட்டிக் காப்பதுவும், சான்றோரின் பழக்க வழக்கங்களைக் கடைபிடிப்பதுவும் அவசியம் என்று நமக்கும் அறிவுறுத்துகிறாள்.

பகவானை நம் உள்ளத்தில் நிறுத்த நாம் பகவானுக்குள்ளே முழுக வேண்டும். நாம் அவனில் முழுகினால் அவன் நம் மனத்தில் வருவான் .முழுகி இருப்பான். இந்த தத்துவத்தை ஆண்டாள் மேலையார் செய்வனகள் என்ற பாசுரச் சொற்களால் உள்ளுரையாகச் சொல்லியுள்ளாள்.

இவ்வாறு உபன்யாசம் செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us