Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி கோலாகலம்

பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி கோலாகலம்

பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி கோலாகலம்

பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி கோலாகலம்

ADDED : ஜன 11, 2024 11:52 PM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த பஞ்சவடீயில் அமைந்துள்ள, 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடந்தது.

விழாவை முன்னிட்டு, அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், கோபூஜை, தனுர்மாத பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை 8:30 மணியளவில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2,000 லிட்டர் பாலாபிேஷகம் நடந்தது.

தொடர்ந்து, வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட பன்னீர், சந்தனம் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் விசேஷ திருமஞ்சனம் நடந்தது. பின், யாகசாலையில் இருந்து எடுத்து வரப்பட்ட கலசங்களில் இருந்த புனித நீரால் அபிேஷகம் நடந்தது.

திருமஞ்சனத்தை தொடர்ந்து, 130 கிலோ எடை கொண்ட ஏலக்காய் மாலை, 36 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சாற்றப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

விழாவில் புதுச்சேரி, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.

விழாவில் அருணா, முரளி ஆகியோரின் தெய்வீக இன்னிசை கச்சேரி நடந்தது. 12:00 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு வைகானச ஆகம முறைப்படி வேத விற்பனர்களால் திருவாதாரனை நடந்தது. தொடர்ந்து விஸ்வரூப ஆஞ்சநேருக்கு வண்ண உதிரி புஷ்பங்களால் அபி ேஷகம் நடந்தது.

சீதா கல்யாணம்


மாலை 4:00 மணிக்கு சீதா-ராமச்சந்திரமூர்த்தி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. யாழ்ப்பாணம் பாலமுருகன் மற்றும் குமரன் நாதஸ்வரம், திருப்பங்கூர் முத்துகுமாரசுவாமி சிறப்பு தவிலுடன் மங்கள இசை நிகழ்ச்சி நடந்தது.

திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us