/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சாலை பாதுகாப்பு வாரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் சாலை பாதுகாப்பு வாரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
சாலை பாதுகாப்பு வாரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
சாலை பாதுகாப்பு வாரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
சாலை பாதுகாப்பு வாரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
ADDED : ஜன 12, 2024 12:21 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில், 45 பேர் உயர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.
பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. ஆர்.டி.ஓ., நாகராஜ் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார்.
மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். 'வாசன் ஐ கேர்' மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய சிகிச்சை முகாமில், பள்ளி மற்றும் கல்லுாரி வாகன ஓட்டுநர்கள், தனியார் பள்ளி ஒப்பந்த வாகன ஓட்டுநர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி பயிற்சியாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஊழியர் பயனடைந்தனர்.
அவர்களுக்கு கிட்டப்பார்வை, துாரப் பார்வை உள்ளிட்ட பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, முகாமில், 152 பேர் கலந்து கொண்ட நிலையில், 45 பேர் உயர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.