Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டி செலவு கணக்கு கேட்ட மனு தள்ளுபடி

அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டி செலவு கணக்கு கேட்ட மனு தள்ளுபடி

அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டி செலவு கணக்கு கேட்ட மனு தள்ளுபடி

அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டி செலவு கணக்கு கேட்ட மனு தள்ளுபடி

ADDED : ஜன 12, 2024 12:30 AM


Google News
மதுரை:மதுரை மாவட்டம், அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டியின் போது வரவு - செலவு கணக்கை முறையாக பராமரித்து அரசிடம் ஒப்படைக்க கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு:

பொங்கலையொட்டி, அலங்காநல்லுாரில் நடக்கும் ஜல்லிக்கட்டில் சில ஆண்டுகளாக ஊழல், முறைகேடுகள் அதிகரித்துள்ளன; உச்சநீதிமன்ற உத்தரவுகள் மீறப்படுகின்றன. இரு ஆண்டுகளுக்கு முன் காளையை அடக்கிய வீரர்களுக்கு தங்க காசு வழங்கியதில் மோசடி நடந்தது.

தங்க காசு, பரிசு பொருட்கள், பணத்தை விழாக் குழுவினர் வசூலிக்கின்றனர். கணக்கு விபரங்களை வருவாய் துறையினரிடம் சமர்ப்பிப்பதில்லை. வரவு - செலவு கணக்கை முறையாக பராமரிக்க, உத்தரவிடக் கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.

அரசு மற்றும் விழாக் குழு தரப்பு: பணம் வசூலிக்கப்படுவதில்லை. எவ்வித புகாரும் இதுவரை வரவில்லை. கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் டோக்கன் வழங்கப்படும். அதன் விபரம் இ - மெயில் வாயிலாக தெரிவிக்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள்: நன்கொடையாளர்கள், காளைகளின் உரிமையாளர்கள் தரப்பில் இதுவரை எவ்வித புகாரும் வரவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us