ADDED : ஜன 12, 2024 12:08 AM

கண்டமங்கலம்: இந்திய மக்கள் உரிமை நீதி பொது நலச் சங்கம் சார்பில் கண்டமங்கலத்தில் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.
சங்கத்தின் தேசிய பொருளாளர் சுர்ஜித்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி கண்டமங்கலம் பழைய காவல் நிலையம் எதிரே நடந்த விழாவிற்கு தேசிய தலைவர் பாலகன்னியப்பன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் கண்ணன், சேர்மன் வாசன் ஆகியோர் சுர்ஜித்குமார் படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தி, மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
தேசிய மகளிர் அணி தலைவர் நாகலட்சுமி, நிர்வாகிகள் பாண்டுரங்கன் சின்னசாமி, ஓய்வுபெற்ற பி.டி.ஓ., பாண்டுரங்கன் உட்பட பலர் பங்கேற்றனர்.