ADDED : ஜன 12, 2024 12:09 AM

செஞ்சி: சிதம்பரம் லோக்சபா தொகுதி காங்., பொறுப்பாளராக செஞ்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரங்கபூபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்காக காங்., கட்சி சார்பில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்துள்ளனர். கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் ஒப்புதலுடன் பொதுச் செயலாளர் வேணுகோபால் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இதில் சிதம்பரம் தொகுதி பொறுப்பாளராக மாநில துணைத் தலைவராக ரங்கபூபதி கல்வி நிறுவன தாளாளர் செஞ்சி வழக்கறிஞர் ரங்கபூபதி நியமிக்கப்பட்டுள்ளார்.