இன ரீதியான மிரட்டலை பொறுத்துக்கொள்ள மாட்டோம்: பேரணிக்கு பிரிட்டன் பிரதமர் எதிர்ப்பு
இன ரீதியான மிரட்டலை பொறுத்துக்கொள்ள மாட்டோம்: பேரணிக்கு பிரிட்டன் பிரதமர் எதிர்ப்பு
இன ரீதியான மிரட்டலை பொறுத்துக்கொள்ள மாட்டோம்: பேரணிக்கு பிரிட்டன் பிரதமர் எதிர்ப்பு
ADDED : செப் 15, 2025 08:52 AM

பிரிட்டன்: இன ரீதியான மிரட்டலை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என புலம்பெயர்ந்தோருக்கு எதிராக நடந்த பேரணிக்கு பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மர் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறுபவர்களுக்கு எதிராக, அந்நாட்டின் தீவிர வலதுசாரி ஆர்வலரான டாமி ராபின்சன் தலைமையில், 'யுனைட் தி கிங்டம்' எனும் பெயரில் லண்டனில் பேரணி நடந்தது. இப்பேரணியில், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேரணியில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே ஏற்பட்ட மோதலில், 26 போலீசார் காயமடைந்தனர். இது தொடர்பாக, 25 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மர் கூறியதாவது: இன ரீதியான மிரட்டலை பொறுத்துக்கொள்ள மாட்டோம்.
பிரிட்டன் சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு. அமைதியான முறையில் போராட்டம் நடத்த மக்களுக்கு உரிமை உண்டு. அது நமது நாட்டின் மதிப்புகளுக்கு அடிப்படையானது.
ஆனால், போலீசார் தங்கள் வேலையைச் செய்வதை தடுப்பதோ அல்லது அவர்களை தாக்குவதையோ நாங்கள் ஆதரிக்க மாட்டோம். நமது கொடி நமது பன்முகத்தன்மையை குறிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.