மும்பையில் கொட்டி தீர்த்தது கனமழை: ரெட் அலெர்ட் விடுத்தது வானிலை மையம்
மும்பையில் கொட்டி தீர்த்தது கனமழை: ரெட் அலெர்ட் விடுத்தது வானிலை மையம்
மும்பையில் கொட்டி தீர்த்தது கனமழை: ரெட் அலெர்ட் விடுத்தது வானிலை மையம்
ADDED : செப் 15, 2025 09:12 AM

மும்பை: மும்பையில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை மையம்.
மும்பையில் நள்ளிரவில் தொடர் கனமழையால் சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது; தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வடலா பகுதியில் மோனோ ரயில் நடுவழியில் நின்றது. மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை, தானே மற்றும் ராய்காட் ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய உள்ளது. மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புனேவில் இரவுநேரத்தில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. நாசிக், பால்கர், ஜலானா மற்றும் நாக்பூருக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.