புகழின் உச்சத்திற்கு செல்ல ஆசையா...
புகழின் உச்சத்திற்கு செல்ல ஆசையா...
புகழின் உச்சத்திற்கு செல்ல ஆசையா...
ADDED : ஜன 12, 2024 04:08 PM
உலகம் தோன்றியபோது முதன்முதலாக நாதமாகிய 'ஓம்' என்னும் பிரணவ மந்திரம் தோன்றியது. ஓம்காரத்தில் இருந்து சூரிய பகவான் தோன்றினார். அதனால் இவரை 'பிரணவ சொரூபம்' என்பர். மார்க்கண்டேய புராணம் இவரது பிறப்பை பற்றி சொல்கிறது.
காஷ்யப முனிவரின் குழந்தையாக தோன்றியவர் இவர். மாரீசி முனிவரின் பேரன். தேவலோக தச்சனான விஸ்வகர்மாவின் மகள் ஸுவர்ச்லாவைத் திருமணம் செய்தார். வைவஸ்தா மனு, எமதர்மராஜன், யமுனா என்னும் குழந்தைகள் பிறந்தனர். தன் இரு கைகளிலும் செந்தாமரை மலர் ஏந்தியுள்ள இவரை வழிபட்டால் ஆரோக்கியம், புகழ், நிர்வாகத்திறன் உண்டாகும்.