ஹொசதுர்காவுக்கு துாய்மை நகர மகுடம் ஜனாதிபதி விருது வாங்கிய கலெக்டர்
ஹொசதுர்காவுக்கு துாய்மை நகர மகுடம் ஜனாதிபதி விருது வாங்கிய கலெக்டர்
ஹொசதுர்காவுக்கு துாய்மை நகர மகுடம் ஜனாதிபதி விருது வாங்கிய கலெக்டர்
ADDED : ஜன 11, 2024 11:43 PM

ஒரு லட்சத்துக்கும் குறைவான நகர பட்டியலில், கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹொசதுர்கா நகரம், ஜனாதிபதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
'சுவச் சர்வேக் ஷான்' திட்டத்தின் கீழ், 2023ம் ஆண்டில், நாட்டில் உள்ள 4,477 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு துாய்மை நகரப்பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த பட்டியலை ஜனாதிபதி திரவுபதி முர்மு டில்லியில் நேற்று வெளியிட்டார்.
இதில், ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகர பட்டியலில், கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹொசதுர்கா நகரம், ஜனாதிபதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.
இந்த விருதை, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர வளர்ச்சி துறை செயலர் மனோஜ் ஜோஷி, சித்ரதுர்கா கலெக்டர் திவ்யபிரபுவிடம் வழங்கினார்.
விருது பெற்று கொண்டு அவர் கூறியதாவது:
ஹொசதுர்கா நகரத்துக்கு ஜனாதிபதி விருது கிடைத்திருப்பது பெருமையாக உள்ளது.
நகரில் துாய்மைக்காக பணியாற்றிய ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும் இந்த பெருமை சாரும். திட, திரவ குப்பைகளை தரம் பிரித்து, அவற்றை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தனி தனியாக பிரிக்கப்பட்டன.
உரம் தயாரிக்கவும், மறுசுழற்சி மூலம் மீண்டும் பயன்படுத்தும் முறையும் கையாண்டோம். ஒரு கலெக்டராக துாய்மை பணிகளை அவ்வப்போது நேரில் ஆய்வு செய்து, உத்தரவுகள் பிறப்பித்து, ஊக்கப்படுத்தினேன். மேற்பார்வையாளர்களும் கண்காணித்து வந்தனர்.
சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் தொடர்ந்து துாய்மை பணி மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.