42 இடங்களில் சமுதாய கூடம் ஒப்புதல் தருவதில் இழுபறி
42 இடங்களில் சமுதாய கூடம் ஒப்புதல் தருவதில் இழுபறி
42 இடங்களில் சமுதாய கூடம் ஒப்புதல் தருவதில் இழுபறி
ADDED : ஜன 12, 2024 02:59 AM

தமிழகத்தில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதிகளில், சமுதாய நலக்கூடங்கள் கட்ட, 42 இடங்கள் தேர்வு செய்யப்பட்டும், அரசு ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது, மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா, புத்தகரம் மற்றும் அதை சுற்றியுள்ள மருதம், சிங்காடிவாக்கம், நாயக்கன்குப்பம், ஊத்துக்காடு, கரூர், ஒட்டனதாங்கல், அந்தியூர்மேல்துாளி உள்ளிட்ட கிராமங்களில், ஆதிதிராவிட மக்கள் பயன்பெறும் வகையில், சமுதாய கூடம் கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பாசறை செல்வராஜ் என்பவர், 2022ல் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் கோரிக்கை விடுத்தார்.
இதுபோல அனைத்து மாவட்டங்களிலும், ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதிகளில், சமுதாய நலக்கூடம் கட்ட கோரிக்கை எழுந்தது. அதற்கான இடத்தை தேர்வு செய்து, அரசுக்கு பரிந்துரை செய்யும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு ஆதிதிராவிட நல இயக்குனரகம் அறிவுறுத்தியது.
மொத்தம், 17 மாவட்டங்களில், 42 கிராம சமுதாய நலக்கூடங்கள் கட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி, ஆதிதிராவிடர் நல இயக்குனர், கடந்த அக்.,10ம் தேதி, துறை செயலருக்கு அனுப்பினார்.
அவர்கள் நிதித்துறைக்கு அனுப்பி உள்ளனர். இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. இது, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
- நமது நிருபர் -