/உள்ளூர் செய்திகள்/சேலம்/53ம் ஆண்டாக பாதயாத்திரை பழநிக்கு புறப்பட்ட பக்தர்கள்53ம் ஆண்டாக பாதயாத்திரை பழநிக்கு புறப்பட்ட பக்தர்கள்
53ம் ஆண்டாக பாதயாத்திரை பழநிக்கு புறப்பட்ட பக்தர்கள்
53ம் ஆண்டாக பாதயாத்திரை பழநிக்கு புறப்பட்ட பக்தர்கள்
53ம் ஆண்டாக பாதயாத்திரை பழநிக்கு புறப்பட்ட பக்தர்கள்
ADDED : ஜன 12, 2024 11:56 AM
வீரபாண்டி: சேலம், பூலாவரியை சேர்ந்த பழனிசாமி தலைமையில் சுற்றுவட்டார முருக பக்தர்கள் இணைந்து, ஸ்ரீதிருமுருகன் திருச்சபை அமைப்பை தொடங்கினர். அவர்கள், பூலாவரியில் இருந்து பழநிக்கு பாதயாத்திரையாக சென்று தை முதல் நாளில் முருகனை தரிசிக்கின்றனர். அதன்படி, 53ம் ஆண்டாக பாதயாத்திரை செல்வோர், மார்கழி பிறப்பன்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். சிலர் இடையிலும் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இவர்கள் நேற்று காலை பூலாவரி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து கையில் வேல் ஏந்தி பாதயாத்திரையை தொடங்கினர். தொடர்ந்து உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பெரியநாயகி தாயார், கரபுரநாதரை வழிபட்டு, கோவிலுக்கு வெளியே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
மாலை, 4:00 மணிக்கு பழநியை நோக்கி, 'கந்தனுக்கு அரோகரா; முருகனுக்கு அரோகரா' கோஷம் முழங்க நடைபயணத்தை தொடங்கினர். வழியில் கோவில், மடம், அன்பர்கள், அன்னதானம், தங்க இடம் கொடுத்து உபசரிக்கின்றனர். வரும், 15ல் பழநியை அடைந்து முருகனை தரிசனம் செய்து அன்று இரவு, பஸ் மூலம் சேலம் வருவர்.
அதேபோல் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்த குமார், மணீஸ்வரன் தலைமையில், 45 பேர் அடங்கிய, பாலதண்டாயுதபாணி நண்பர் குழுவினர், நேற்று உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் சிறப்பு பூஜை, அன்னதானம் செய்து, 10ம் ஆண்டாக பாத யாத்திரையை தொடங்கினர்.