குழந்தை டயாபரில் மிளகாய் துாள்; அங்கன்வாடி ஊழியர் மீது வழக்கு
குழந்தை டயாபரில் மிளகாய் துாள்; அங்கன்வாடி ஊழியர் மீது வழக்கு
குழந்தை டயாபரில் மிளகாய் துாள்; அங்கன்வாடி ஊழியர் மீது வழக்கு
ADDED : மார் 22, 2025 03:37 AM

ராம்நகர்: அங்கன்வாடியில், இரண்டரை வயது ஆண் குழந்தைக்கு சூடு வைத்ததுடன், டயாபரில் மிளகாய் துாள் போட்டு சித்ரவதை செய்த பெண் உதவியாளர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
'
கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டம், மஹாராஜகட்டே கிராமத்தில் வசிப்பவர்கள் ரமேஷ் நாயக் - சைத்ரா பாய் தம்பதி. இவர்களுக்கு இரண்டரை வயதில், தீக்ஷித் என்ற ஆண் குழந்தை உள்ளது.
கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தையை சேர்த்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன், மாலையில் குழந்தையை அழைத்து வர, சைத்ரா பாய் அங்கன்வாடிக்கு சென்றார். அப்போது குழந்தை அழுது கொண்டிருந்தது.
இதுகுறித்து சைத்ரா பாய் விசாரித்தபோது, அங்கன்வாடி உதவியாளர் சந்திரம்மா, குழந்தைக்கு சூடு வைத்திருப்பது தெரிந்தது. அது மட்டுமல்ல; குழந்தை அணிந்திருந்த டயாபரில் மிளகாய் துாளை போட்டிருந்ததும் தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த சைத்ரா பாய், கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தார். அதிகாரிகள், அங்கன்வாடி மையத்துக்கு சென்று விசாரித்தனர். அங்கன்வாடி உதவியாளர் சந்திரம்மா மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.
போலீஸ் நிலையத்தில் ரமேஷ் நாயக் புகார் அளித்தார். இதன்படி, சந்திரம்மா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.