ADDED : ஜன 12, 2024 06:50 AM
மதுரை : மதுரையில் 42 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய அளவிலான கேரம் போட்டி அடுத்த மாதம் நடக்கிறது.
மாவட்ட கேரம் போர்டு அசோசியேஷன் அலுவலகத்தில் மாநில தலைவர் நாசர்கான் தலைமையில் செயற்குழுக்கூட்டம் நடந்தது. பிப்.,10 முதல் 13 வரை மதுரையில் தேசிய அளவிலான போட்டி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நாசர்கான் கூறுகையில், ''42 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் இப்போட்டி நடத்தப்படுகிறது. 25 மாநிலங்களில் இருந்து 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
போட்டியை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைக்கிறார். கூட்டத்தில் செயலாளர் இருதயம், பொருளாளர் கார்த்திகேயன், துணைச்செயலாளர் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.