/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பொங்கல் தொகுப்பு வழங்கும் விழாவுக்கு தலைவருக்கு அழைப்பு இல்லாததால் விரக்திபொங்கல் தொகுப்பு வழங்கும் விழாவுக்கு தலைவருக்கு அழைப்பு இல்லாததால் விரக்தி
பொங்கல் தொகுப்பு வழங்கும் விழாவுக்கு தலைவருக்கு அழைப்பு இல்லாததால் விரக்தி
பொங்கல் தொகுப்பு வழங்கும் விழாவுக்கு தலைவருக்கு அழைப்பு இல்லாததால் விரக்தி
பொங்கல் தொகுப்பு வழங்கும் விழாவுக்கு தலைவருக்கு அழைப்பு இல்லாததால் விரக்தி
ADDED : ஜன 12, 2024 01:48 PM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் துவக்க விழாவிற்கு, ஆளுங்கட்சியை சேர்ந்த பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவரை அழைக்காததால், கட்சியினர் விரக்தியடைந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு, நேற்று முன்தினம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நாளில், பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவர் செல்வராஜை, ரேஷன் கடை பணியாளர்கள் அழைத்தனர். அவரும், ரேஷன் கடைக்கு சென்று முதல் நாளில், பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கி துவக்கி வைத்தார். இவருடன் கவுன்சிலர்களும் வந்தனர்.
ஆனால், இந்தாண்டு பொங்கல் பரிசு வழங்கும் துவக்க விழாவிற்கு நகராட்சி தலைவர் செல்வராஜை, ரேஷன் கடை பணியாளர்கள் அழைக்கவில்லை. ஆளுங்கட்சியை சேர்ந்த நகராட்சி தலைவரை, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அழைக்காததால், கட்சியினர் விரக்தியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவர் செல்வராஜ் கூறியதாவது:
பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் செயல்படும் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு வழங்க கடந்தாண்டு என்னை அழைத்தனர். இந்தாண்டு என்னை அழைக்கவில்லை. இதற்கு என்ன காரணம் என, தெரியவில்லை. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.