Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய பதிப்புகள்

To type in English

பிப் 10, 2024

மொத்த செய்திகள்: 1088

அசுவினி: உங்கள் நட்சத்திர நாதனான கேது பகவான் இந்த மாதம் முழுவதும் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். லாப ஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால் அரசு வகையிலான சங்கடங்கள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு ஏற்படும். இதுவரையில் தடைபட்டு வந்த முயற்சிகள் இனி வெற்றியாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். வருமானம் அதிகரிக்கும். விவசாயிகளின் விளைப் பொருளுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கும். குரு பகவானின் பார்வைகளால் குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். குலதெய்வ அருள் உண்டாகும். உங்கள் மனதை வாட்டிவந்த பிரச்னைகள் விலகும். தம்பதியரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். தெய்வ அருள் உண்டாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். உங்களில் சிலர் புதிய வீடு கட்டி அதில் குடியேறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை உண்டாகும்.சந்திராஷ்டமம்: மார்ச். 2, 3.அதிர்ஷ்ட நாள்: பிப். 16,18,25, மார்ச் 7,9பரிகாரம் விநாயகருக்கு அருகம்புல் சூட்டி வழிபட நன்மை அதிகரிக்கும்.பரணி: உங்கள் ராசிநாதனும் நட்சத்திரநாதனும் பத்தாம் இடத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சில சிரமங்களை நீங்கள் சந்திக்க வேண்டியதிருக்கும். எதிர்பாராத விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டாகும். வரவு செலவுகளில் முடிந்த வரையில் கவனமாக இருப்பது நல்லது. குருபகவான் ஜென்ம ராசியில் சஞ்சரித்தாலும் ஒன்பதாம் இடத்தை பார்ப்பதால் தெய்வ அருள் உண்டாகும். பெரியோர்களின் உதவியால் நினைத்ததை சாதித்துக்கொள்வீர்கள். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனிபகவானால் தொழில், வியாபாரம் விருத்தியாகும். சிலர் புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவர். கடந்த காலத்தில் இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர். புதிய இடம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணியாளர்களுக்கு லாபச் சூரியனால் சங்கடங்கள் விலகும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். சனிபகவானின் பார்வை ஜென்ம ராசியிலும் எட்டாம் இடத்திலும் பதிவதால் சிலருக்கு வம்பு, வழக்குகள் தேடிவரும். உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.  பெண்களின் நிலையில் உயர்வு உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். குடும்பம், பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சியனைத்தும் லாபத்தில் முடியும்.சந்திராஷ்டமம்: மார்ச் 3, 4.அதிர்ஷ்ட நாள்: பிப். 15,18,24, மார்ச் 6,9.பரிகாரம்: மடப்புரம் காளியை வழிபட்டால் நன்மை கூடும். கார்த்திகை 1 ம் பாதம்: உங்கள் நட்சத்திரநாதன் 11ம் இடத்தில் சஞ்சரிப்பதால் இந்த மாதத்தை உங்களுக்கு அதிர்ஷ்டமான மாதம் என்றே சொல்ல வேண்டும். உங்கள் எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறும். இதுவரையில் தடைபட்ட முயற்சிகள் இனி ஒவ்வொன்றாக நிறைவேறத் தொடங்கும். அரசுவழியில் எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும்.  புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்பு உண்டாகும். மற்றவர்கள் முன்பாக உங்கள் ஆளுமைத்திறன் வெளிப்படும். லாபம் பலவழிகளில் வர ஆரம்பிக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். பணியாளர்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள்கள் விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். புதிய இடம், சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன்கள் கிடைக்கும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். வெளிநாட்டிற்கு செல்லும் முயற்சி வெற்றியாகும் பெண்களின் வாழ்க்கையில் இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். வெளிவட்டாரத்திலும் குடும்பத்திலும் செல்வாக்கு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பாராட்டப்படுவீர்கள். விவசாயிகளின் எண்ணம் நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சங்கடம் விலகும். ஆசிரியர்களின் ஆதரவு உண்டாகும்.சந்திராஷ்டமம்: மார்ச் 4அதிர்ஷ்ட நாள்: பிப். 18, 19, மார்ச். 1,9,10பரிகாரம்: சிவனைச் சரணடைந்தால் சிரமம் குறையும்.
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: உங்கள் நட்சத்திரநாதன் இந்த மாதம் முழுவதும் பத்தாம் இடத்தில் சஞ்சரிப்பதால் தொழில், உத்தியோகம் வியாபாரம் போன்றவற்றில் இருந்த தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் எதிர்பார்த்த வருமானம் வந்துசேரும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிநாட்டு முயற்சிகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். உங்கள் செல்வாக்கு உயரும் என்றாலும், தொழிலில் முழுமையான அக்கறையை நீங்கள் செலுத்துவதால் லாபம் அதிகரிக்கும். புதனின் அருளால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கலைஞர்களின் திறமை வெளிப்படும். சிலர் புதிதாக சொத்து வாங்குவீர்கள். பாக்கிய சுக்கிரனால் வருமானம் அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்களின் தேவைகள் பூர்த்தியாகும். குழந்தைகளின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும்.சந்திராஷ்டமம்: மார்ச் 4, 5அதிர்ஷ்ட நாள்: பிப். 15,19,24 மார்ச் 1,6,10.பரிகாரம்: விநாயகப்பெருமானை வழிபட்டு வர வளம் சேரும்.ரோகிணி: சந்திர பகவானின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் உங்கள் விருப்பங்கள் நிறைவேறுகின்ற மாதமாக இருக்கும். ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிக்கின்ற சுக்கிர பகவான் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவார். புதிய வாகனம் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் புதபகவான் தொழில் ரீதியாக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை வெற்றியாக்குவார். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சொத்து சேர்க்கை உண்டாகும். அரசு வழி முயற்சிகள் வெற்றியாகும். உங்கள் திறமை செல்வாக்கு யாவும் இப்போது வெளிப்படும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் பலவீனம் அடைவார்கள். அரசுவழி முயற்சிகளில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். ஏழாம் இடத்திற்கு சனியின் பார்வை உண்டாவதால் குடும்பத்தினரிடம் அனுசரித்துச்செல்வது இக்காலத்தில் நன்மையாக இருக்கும். பெண்கள் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் சங்கடங்கள் இல்லாமல் போகும். நட்பு வட்டத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. வீண்செலவுகள் அதிகரிக்கும். இருந்தாலும் எதிர்பாராத வருமானம் வரும். உங்கள் தேவையனைத்தும் பூர்த்தியாகும். மாணவர்களின் உயர்கல்விக் கனவு நிறைவேறுகின்ற வகையில் படிப்பின் மீது அக்கறை அதிகரிக்கும். தேர்வை தைரியமாக எதிர்கொள்ளும் நிலை ஏற்படும். விவசாயிகளுக்கு சங்கடங்கள் விலகும்.சந்திராஷ்டமம்: மார்ச் 5, 6.அதிர்ஷ்ட நாள்: பிப். 15, 20, 24, மார்ச். 2,6,11பரிகாரம் சிவனை வழிபட சங்கடம் அனைத்தும் விலகும்.மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்: இந்த மாதம் முழுவதும் உங்கள் நட்சத்திரநாதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் அவருடைய பார்வை மூன்றாம் இடத்திற்கு உண்டாவதால் உங்கள் செயலில் வேகம் இருக்கும். காரியங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். பத்தாம் இடச் சூரியனால் அரசுவழி முயற்சிகள் ஆதாயம் தரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வேலைத் தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய பொறுப்பு உண்டாகும். லாப ராகுவால் எதிர்பார்த்த வருமானம் வர ஆரம்பிக்கும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். புதபகவான் உங்கள் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவார். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைப்பார். சொத்து சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி வருமானம் வர ஆரம்பிக்கும். சுக ஸ்தானத்திற்கு சனிபகவானின் பார்வை பதிவதால் அலைச்சல் அதிகரிக்கும். தாயாரின் உடல் நிலையில் சில சங்கடங்கள் தோன்றி மறையும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் ஏதாகிலும் ஒரு வகையில் முட்டல் மோதல் என்ற நிலை உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பெண்களின் கனவுகள் பூர்த்தியாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கவனம் செல்லும். விவசாயிகளுக்கு விளைச்சலில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் எண்ணம் கல்வியின் மீது செல்லும்.சந்திராஷ்டமம்: மார்ச் 6, 7.அதிர்ஷ்ட நாள்: பிப். 15, 18, 24. மார்ச் 6, 9.பரிகாரம்: சீதாராமரை வழிபட வாழ்க்கை வளமாகும்.
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: இந்த மாதம் உங்களுக்கு யோகமான மாதமாகும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் லாப, தைரிய, சத்ரு ஸ்தானங்களைப் பார்ப்பதால் உங்கள் நிலையில் இதுவரை இருந்த சங்கடங்கள் எல்லாம் விலகும். நீங்கள் நினைப்பதெல்லாம் நடந்தேறும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வரவு அதிகரிக்கும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தை உண்டாக்குவார். புதிய சொத்து சேர்க்கையை ஏற்படுத்துவார். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு உண்டாகும். புதபகவான் மாதத்தின் பிற்பகுதியில் உங்களுக்கு யோகத்தை வழங்குவார். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைப்பார். சிலருக்கு சொத்து சேர்க்கை உண்டாகும். வியாபாரம், தொழிலில் இருந்த தடைகள் விலகி லாபம் தோன்றும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். பெண்களின் கனவுகள் நிறைவேறும். கல்வி வேலைவாய்ப்பு போன்ற முயற்சிகள் வெற்றியாகும். திருமண வயதினருக்கு திருமணம் கைகூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். விவசாயிகள் முயற்சி வெற்றியாகும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவர்.சந்திராஷ்டமம்: மார்ச் 6, 7.அதிர்ஷ்ட நாள்: பிப்.18, 23. மார்ச். 5, 9.பரிகாரம்: கோளாறு பதிகம் பாடி சிவனை வழிபட குறை தீரும்.திருவாதிரை: யோகக்காரகனான ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். உங்கள் நட்சத்திர நாதன் கேந்திர பலம் பெறுவதுடன் மாதத்தின் பிற்பகுதியில் ராசிநாதனும் அங்கே சஞ்சரிப்பதால் இதுவரையில் இருந்த சங்கடம் விலகும். மாதத்தின் பிற்பகுதியில் சொத்துச் சேர்க்கை உண்டாகும். உங்கள் நீண்டநாள் கனவு நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் தொட்டதெல்லாம் பொன்னாகும். வரவு அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். குலதெய்வ அருள் பரிபூரணமாக இப்போது உண்டாகும். குடும்பத்தினர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். திருமண வயதினருக்கு வரன் தேடிவரும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த சங்கடங்கள் விலகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். நீண்டநாள் நெருக்கடிகள் முடிவிற்கு வரும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். வேலைவாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தவர்களுக்கு அதற்குரிய அனுமதிகள் கிடைக்கும். பெண்களின் விருப்பங்கள் நிறைவேறும். தடைபட்டிருந்த முயற்சிகள் லாபமாகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். எதிர்பார்த்த பதவி உயர்வு ஏற்படும். கலைஞர்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாகும். புகழ், செல்வாக்கு போன்றவை உண்டாகும். விவசாயிகளின் செயல்களில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.சந்திராஷ்டமம்: மார்ச். 8.அதிர்ஷ்ட நாள்: பிப். 13, 14, 22, 23. மார்ச். 4, 5, 13பரிகாரம்: நந்தீஸ்வரரை வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்: உங்கள் நட்சத்திரநாதன் குருபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரையில் இருந்த சங்கடங்கள் விலகும். உங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். செல்வாக்கு உயரும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பாக்கிய ஸ்தான சனி பகவானால் பிரச்சினைகள் முடிவிற்கு வரும். பெரியோரின் ஆசிர்வாதம் உண்டாகும். தெய்வஅருள் ஏற்படும். சிலர் கோயில்களுக்கு புனித யாத்திரை சென்று வருவதுடன் வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாலினரால் ஏற்பட்ட சங்கடங்கள் முடிவிற்கு வரும். உங்கள் நிர்வாகத்திறன் வெளிப்படும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இயந்திரத் தொழில், ஆட்டோமொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், மருத்துவம் பொறியியல் துறையினர் எதிர்பார்த்த ஆதாயத்தைக் காண்பர். அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் உயர்வு பெறுவர். பெண்களின் விருப்பம் நிறைவேறும். முயற்சிகள் வெற்றி பெறும். உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களின் எண்ணம் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். விவசாயிகள் திட்டமிட்டு செயல்படுவதால் லாபம் காண முடியும். கலைஞர்களுக்கு யோகமான மாதமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவதால் நன்மை உண்டாகும்.சந்திராஷ்டமம்:  மார்ச் 9அதிர்ஷ்ட நாள்: பிப். 21, 23, மார்ச். 3, 5, 12பரிகாரம்: லட்சுமி ஹயக்ரீவரை வழிபட விருப்பம் நிறைவேறும்.
புனர்பூசம் 4 ம் பாதம்: சந்திர பகவானை ராசிநாதனாகவும் குருபகவானை நட்சத்திர நாதனாகவும் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் கேது பகவானால் யோகம் உண்டாகும். விருப்பம் நிறைவேறும். முயற்சி லாபமாகும். தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும். எட்டாம் இடத்தில் சனிபகவான் ஆட்சியாக சஞ்சரிப்பதால் உடல்ரீதியாக சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதிருக்கும். இயந்திரப் பணியாளர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனப் பயணத்திலும் கவனம் தேவை. சுயதொழில் செய்பவர்கள் தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். அரசுவழியில் நெருக்கடிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கணக்கு வழக்குகளில் கவனம் தேவை. உங்களுக்கு எதிராக சிலர் சதி புரிவார்கள் என்பதால் எல்லாவற்றிலும் விழிப்புணர்வு வேண்டும். வியாபாரத்தில் மிக விழிப்புணர்வு அவசியம். பணியாளர்கள் அனைத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில் தேவையற்ற சங்கடங்கள் தோன்றும். ஏழாம் இடத்தில் சுக்கிரனும், செவ்வாயும் இணைந்திருப்பதால் எதிர்பாலினரிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மனதில் ஆசைகளுக்கு இடம் கொடுப்பதால் வீண் சங்கடங்களை சந்திக்க நேரிடும். குரு பகவானின் பார்வைகள் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆரோக்கியத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். பெண்கள் தங்களின் உடல்நிலையோடு,  கணவரின் உடல்நிலையிலும் கவனம் செலுத்துவது அவசியம். புதிய நட்புகளிடம் மிகுந்த எச்சரிக்கை தேவை. பாக்கிய ராகுவால் வெளிநாட்டு தொடர்புகள் வெற்றியளிக்கும். பணவரவு அதிகரிக்கும். வெளிநாட்டிற்கு செல்வதற்காக முயற்சித்தவர்களின் எண்ணம் நிறைவேறும். மாதத்தின் முற்பகுதியில் சிலர் புதிய சொத்து வாங்குவீர்கள். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் கல்வியின் மீது இருக்கும் ஆர்வம் பிற்பகுதியிலும் இருக்க வேண்டும்.சந்திராஷ்டமம்: மார்ச் 9அதிர்ஷ்ட நாள்: பிப். 20,21, மார்ச் 2,3,11,12பரிகாரம்: கண்ணுடைய நாயகியை வணங்க வளம் கூடும்.பூசம்: தொழில், கர்ம காரகனான சனிபகவானின் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு எப்போதும் தன்னம்பிக்கை, தைரியம் கூடுதலாகவே இருக்கும். இந்த மாதம் உங்கள் நட்சத்திரநாதன் எட்டாம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். சூரியபகவானும் அங்கே இணைந்திருக்கிறார் என்றாலும் இருவருமே மறைவு பெற்றிருப்பதால் நீங்கள் செய்யும் தொழிலில் உங்கள் கவனத்தை முழுமையாக செலுத்த வேண்டும். பணியில் நெருக்கடி தோன்ற வாய்ப்பிருப்பதால் கவனமாக செயல்பட வேண்டும். பொதுவாக உங்கள் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருமண வாழ்வில் தடை, நெருக்கடி இருக்கும் என்பதால் இக்காலத்தில் வாழ்க்கைத்துணையுடன் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கோபத்திற்கு இடம் தராமல் எந்த ஒன்றையும் பரஸ்பரம் பேசி தீர்வு காண்பது நல்லது. மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால்  முயற்சி நிறைவேறும். குருபகவானின் பார்வைகள் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும்.  வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதால் லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு இக்காலத்தில் சில சங்கடங்கள் தோன்றும். குறிப்பாக வாழ்க்கைத் துணையுடன் இணக்கமற்ற நிலை ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் எப்போதும் கவனம் தேவை. உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம். சிலருக்கு வெளிநாட்டு தொடர்புகள் வழியாக ஆதாயம் உண்டாகும். புதிய சொத்துகள் வாங்குவீர்கள். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். விவசாயிகள் கவனமாக செயல்படுவதால் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்கள் படிப்பின் மீது முழுமையான அக்கறை செலுத்துவது அவசியம். சந்திராஷ்டமம்: மார்ச் 10அதிர்ஷ்ட நாள்: பிப்.17,20,26, மார்ச் 2,8,11பரிகாரம்: தினமும் நவகிரகங்களை வழிபடுவது நன்மை தரும்.ஆயில்யம்: வித்யா காரகனான புதபகவானின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தனித்திறமையும், ஆளுமையும் இருக்கும். சூழலைப் புரிந்து கொண்டு செயல்படும் ஆற்றல் இருக்கும். இந்த மாதம் உங்கள் நட்சத்திரநாதன் மாதத்தின் முற்பகுதியில் அனுகூலமாக சஞ்சரிப்பதால் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதை அடைய வேண்டுமோ அதை அடைவதற்கு முயற்சித்து அதில் வெற்றி காண்பீர்கள். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுபகவானும் முயற்சியை வெற்றியாக்குவார். குரு பகவானின் பார்வை பணவரவை அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றிடக்கூடிய நிலையை ஏற்படுத்தும். குடும்பத்தில் நிம்மதியான சூழலை உண்டாக்கும். தாய்வழி உறவுகளால் அனுகூலம் அதிகரிக்கும். எதிரிகள் விலகிச் செல்வர். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.  வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி,  சூரியனும் உங்களுக்கு சாதகமான பலன்களை வழங்கும் இடத்தில் இல்லை என்பதால் அரசு வழியிலான முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம். உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்கள்  மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். விருப்பம் நிறைவேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேறும். விளைச்சல் அமோகமாகும். வருமானம் அதிகரிக்கும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர். சந்திராஷ்டமம்: மார்ச் 11,12.அதிர்ஷ்ட நாள்: பிப். 14,20,23, மார்ச். 2,5பரிகாரம் கால பைரவரை வணங்க சங்கடம் யாவும் நீங்கும்.
மகம்: ஆத்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு, இந்த மாதம் உங்கள் பாக்யாதிபதி செவ்வாய் பகவான் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் உடலில் இருந்த சங்கடம் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் போட்டியாளர்களால் உண்டான நெருக்கடிகள் விலகும். எதிர்ப்புகள் இல்லாமல் போகும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். மாதத்தின் பின்பகுதியில் புதன் பகவான் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சிலருக்கு புதிய இடம் வாங்கும் யோகம் உண்டாகும். சப்தம ஸ்தானத்தில் சனிபகவானும், சூரியனும் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவைப்படும். வாழ்க்கைத்துணை மற்றும் நண்பர்களை அனுசரித்துச் செல்வது நன்மையை ஏற்படுத்தும்.  வார்த்தைகளிலும் இக்காலத்தில் நிதானம் அவசியம். உங்களுக்கு எதிராக சிலர் சதிகள் புரியலாம் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. கலைஞர்கள் இக்காலத்தில் நிதானமுடன் செயல்படுவது நன்மையளிக்கும். புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. வெளிநாட்டிற்கு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சிகள் தற்சமயம் இழுபறியாகும். பெண்களுக்கு இந்த மாதம் சில சங்கடங்கள் ஏற்படும் என்றாலும் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வாழ்க்கைத் துணையால் நன்மைகளை அடைவீர்கள். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் கவனமுடன் செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். மாணவர்கள் மாதத்தின் முற்பகுதியில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.சந்திராஷ்டமம்: பிப்.14, மார்ச் 12,13அதிர்ஷ்ட நாள்: பிப்.16,19,25. மார்ச் 1,7,10.பரிகாரம்: ஆதிநாதப் பெருமாளை எண்ணி செயல்பட யாவும் வெற்றியாகும்.பூரம்:உங்கள் ராசிநாதன் சூரியன் ஏழாம் இடத்தில் சனி பகவானுடன் இணைந்து சஞ்சரிப்பதுடன் ராசியையும் பார்க்கிறார். இந்நிலையில் குருபகவானின் ஐந்தாம் பார்வையும் ராசிக்கு உண்டாகிறது என்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். மற்றவர்களால் மதித்திடக்கூடிய இடத்தை அடைவீர்கள். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும். உங்கள் நட்சத்திரநாதன் செவ்வாயுடன் இணைந்து சஞ்சரிப்பதால் மனதில் சஞ்சலம் அதிகரிக்கும். தேவையற்ற சிந்தனைகள் மேலோங்கும் என்றாலும், குருபகவானின் பார்வை முழுமையாக உங்களுக்கு இருப்பதால் சிந்தித்து செயல்படுவீர்கள். எந்தவித சங்கடங்களும் உங்களுக்கு ஏற்படாது. எதிர்பார்த்த வருமானம் வரும். முயற்சிகள் வெற்றியாகும். குடும்பம், தன ஸ்தானத்தில் கேது பகவான் சஞ்சரிப்பதால் பணவரவில் தடைகள் இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். குடும்பத்திற்குள்  குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். உங்கள் வார்த்தைகளின் வழியாகவும் சங்கடங்கள் ஏற்படும். அதே நேரத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும், உங்கள் ராசிக்கும் குருபகவானின் பார்வை இருப்பதால் குலதெய்வ அருளுடன் அனைத்தையும் சமாளிப்பீர்கள். நெருக்கடிகளில் இருந்து வெளியில் வருவீர்கள். குழந்தைக்காக நீண்ட காலமாக ஏங்கியவர்களுக்கு இப்போது அந்த பாக்கியம் ஏற்படும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் பெண்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். மனதில் உண்டாகும் குழப்பங்களுக்கு இடம் தராமல் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச்செல்வது நல்லது. விவசாயிகளுக்கு முதலீட்டிற்கு ஏற்ற லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: பிப்.14,15, மார்ச் 13அதிர்ஷ்ட நாள்: பிப்.19,24, மார்ச்1,6,10பரிகாரம் ஆண்டாளை வழிபட்டால் நன்மை பன்மடங்காக வரும். உத்திரம் 1 ம் பாதம்: ஆத்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்திலும், ராசியிலும் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் முயற்சிகளில் சில சங்கடங்கள் உண்டாகும். ஏழாம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரிய பகவானால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடம் மாற்றம், அதன் காரணமாக ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படும். சுயதொழில் செய்பவர்கள் வியாபாரத்தை விரிவு செய்வதற்காக வெளியூரில் கிளைகளை அமைப்பீர்கள். அதனால் வெளியூரில் வசிக்கும் நிலை ஏற்படும். குருபகவானின் பார்வை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இடமாற்றமும்  நன்மை தரும். ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், சுக்கிரனின் பார்வை உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் பதிவதால் சிலர் புதிய இடம் வாங்குவர்.  சிலருக்கு வீண் செலவு ஏற்படும் என்பதால் திட்டமிட்டு செலவழித்தால் விரயம் குறையும்.  எட்டாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் சிலர் தாங்கள் செய்யாத தவறுக்கு பதில் சொல்ல நேரிடலாம் என்பதால் பணிபுரியும் இடத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் என்பது இல்லாமல் போகும் என்றாலும் ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் எல்லா விதமான சங்கடங்களையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த பூமி, நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள் உங்களுக்கு சாதகமாக மாறும். காவல்துறையில் பணியாற்றுவோருக்கு இந்த மாதம் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வும் ஏற்படும். பெண்கள் அவசரத்தனத்தை விட்டு நிதானமாக செயல்படுவதால் நினைத்ததை சாதிக்க முடியும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச்செல்வது இக்காலத்தில் நன்மை தரும். மற்றவர்களின் ஆலோசனையை ஏற்காமல் சுயமாக சிந்தித்து செயல்பட பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சல் ஏற்படும். வருவாய் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகும்.சந்திராஷ்டமம்: மார்ச் 15,16அதிர்ஷ்ட நாள்: பிப்.19, மார்ச் 1, 10.பரிகாரம் அதிகாலையில் சூரியனை வழிபட வாழ்வு வளமாகும்.
உத்திரம் 2,3,4 ம் பாதம்: ஆன்ம காரகனான சூரியன், வித்யா காரகனான புதனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு, எல்லாவிதமான பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் சக்தி எப்போதும் இருக்கும். உங்கள் புத்திசாலித்தனமே உங்கள் வாழ்க்கையின் அடிப்படை என்று சொல்லலாம். இந்த மாதம் முழுவதும் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் உங்கள் நட்சத்திரநாதன் சஞ்சரிப்பதால் இதுவரையில் உங்களுக்கிருந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். வம்பு வழக்குகள் முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்கு அதற்குரிய அனுமதி கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் நீங்கும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஜென்ம ராசிக்குள் கேது பகவான் சஞ்சரிப்பதால் மனதில் குழப்பங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கும் நிலை உண்டாகும். வியாபாரம், தொழில் போன்றவற்றில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். பூர்வீகச் சொத்துகள் சம்பந்தமாக ஏற்பட்ட வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். ஏழாமிட ராகுவால் எதிர்பாலினரிடமும் நட்புகளிடமும் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனம் இருக்க வேண்டும். இல்லையெனில் விரோதத்தை சந்திக்க நேரிடும். . பெண்களுக்கு இக்காலத்தில் உடல் ரீதியான பிரச்னைகள் தீரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். விவசாயிகளின் விளைபொருளுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவர். கலைஞர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சந்திராஷ்டமம்: மார்ச். 14,15.அதிர்ஷ்ட நாள்: பிப்.19,23. மார்ச் 1,5,10பரிகாரம்: பாலகிருஷ்ணரை வழிபட நிம்மதி நிலைக்கும். அஸ்தம்: மனக்காரகன் சந்திரனை நட்சத்திரநாதனாகவும்,  கல்விக்காரகன் புதனை ராசிநாதனாகவும் கொண்டு பிறந்த உங்களுக்கு எந்தவொரு செயலையும் திறமையாக செய்திடக்கூடிய ஆற்றல் இருக்கும். எதற்காகவும் உங்களுடைய முயற்சிகளை நீங்கள் இடையில் நிறுத்தி விட மாட்டீர்கள். இந்த மாதத்தில் உங்கள் தன குடும்பாதிபதி சுக்கிர பகவான் உங்களுக்கு முழுமையான யோகத்தை வழங்கிட இருக்கிறார். நீங்கள் எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். உங்கள் ராசியாதிபதியும் மாதத்தின் முற்பகுதியில் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிலை உயரும். மேலதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். சிலருக்கு விரும்பிய இட மாற்றமும், பதவி உயர்வும் ஏற்படும். புதிய சொத்து சேர்க்கையும் உண்டாகும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உங்களுக்கு உதவியாக இருப்பார். சுயதொழில் தொடங்க முயற்சித்தவர்களின் எண்ணம் நிறைவேறும். சிலருக்கு வேலை வாய்ப்பிற்குரிய தகவல் வந்து சேரும். கலைஞர்களுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். விவசாயிகள் தாங்கள் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கப் பெறுவர்.  மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சந்திராஷ்டமம்: மார்ச் 15,16அதிர்ஷ்ட நாள்: பிப். 20,23, மார்ச் 2,5,11பரிகாரம்: மீனாட்சியம்மனை வழிபட்டால் நன்மை பன்மடங்காகும். சித்திரை 1,2 ம் பாதம்: தைரிய, வீரிய, பராக்ரமக் காரகனான செவ்வாய், வித்யாகாரகனான புதனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு எந்த ஒன்றையும் வேகமாக செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கும். யாருக்காகவும் உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள மாட்டீர்கள். உங்களுக்குரிய பாதை எப்பொழுதும் தனித்ததாகவே இருக்கும். இந்த மாதம் உங்களுக்கு இதற்கு முன்பிருந்த சங்கடம் எல்லாம் விலகும் மாதமாக இருக்கும். சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, சூரியன் இருவரும் உங்கள் ஆற்றலை அதிகரிப்பர். முயற்சிகளை வெற்றியாக்குவர். நினைத்ததை சாதிக்கும் நிலையை உண்டாக்குவர். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். அரசு வழியில் உண்டான சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும். உடலில் இருந்த சங்கடங்கள் விலகி ஆரோக்கியமாக செயல்படுவீர்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும். குருபகவானின் பார்வை வாக்கு ஸ்தானத்திற்கு உண்டாவதால் உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்த சங்கடங்கள் விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் நீங்கும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். விவசாயிகளின் விருப்பம் நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகும்.சந்திராஷ்டமம்: மார்ச் 16,17அதிர்ஷ்ட நாள்: பிப்.18, 23. மார்ச் 5, 9பரிகாரம்: சாமுண்டீஸ்வரியை மனதில் வேண்டி வழிபட நன்மை உண்டாகும்.
சித்திரை 3, 4 ம் பாதம்: தைரிய, வீரிய, சகோதர காரகனான செவ்வாய், அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு உங்கள் வெற்றியை நோக்கிய சிந்தனையே எப்பொழுதும் இருக்கும். நினைத்ததை அடையும் வரை அதற்குரிய முயற்சிகளை தொடர்ந்து கொண்டே இருப்பீர்கள். இந்த மாதம் குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு உண்டாவதால் இதுவரையில் இருந்த சங்கடங்கள் எல்லாம் விலக ஆரம்பிக்கும். வேலைவாய்ப்பிற்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை ஏற்படும். புதிய இடம் வாங்கும் முயற்சியும், தொழில் தொடங்கும் எண்ணமும் நிறைவேறும். திருமண வயதினருக்கு வரன் வந்து சேரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். வெளிநாட்டு முயற்சிகள் உங்களுக்கு சாதகமாகும். வியாபாரத்தில் எதிரிகள் பின்வாங்கிச் செல்வார்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேறும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதம் என்றே சொல்ல வேண்டும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு அதிகரிக்கும். உடலில் இருந்த சங்கடங்கள் விலகும். எதிர்ப்புகள் நீங்கும். மாதத்தின் பிற்பகுதியில் விருப்பங்கள் நிறைவேறும். விவசாயிகளின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படும். எதிர்பார்த்த வரவு உண்டாகும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் கல்வியின் மீது அக்கறை அதிகரிக்கும். பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் முயற்சியில் முழுமையாக ஈடுபடுவீர்கள்.சந்திராஷ்டமம்: பிப். 17, 18அதிர்ஷ்ட நாள்: பிப்.15,24. மார்ச் 6,9பரிகாரம்: ஆதிபராசக்தியை தினமும் வழிபட்டால் சங்கடம் தீரும்.சுவாதி: யோகக்காரகனான ராகு, அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எந்த ஒரு செயலிலும் அதிகமான ஈடுபாடு இருக்கும். எதிர்பார்ப்பு என்பது உங்களுக்குள் எப்போதும் இருக்கும். அதை நோக்கியே உங்கள் முயற்சிகளும் இருக்கும். இந்த மாதம் உங்கள் நட்சத்திரநாதன் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் இதுவரையில் உங்களுக்கிருந்த சங்கடங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். மனதில் புதிய நம்பிக்கை ஏற்படும். உடலில் இருந்த பிரச்னைகள் நீங்க ஆரம்பிக்கும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகி அனுகூலம் உண்டாகும். வழக்குகள் இருப்பின் உங்களுக்கு சாதகமாகும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களின் எண்ணம் நிறைவேறும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மாதத்தின் பிற்பகுதியில் ஏற்படும். பெண்களின் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகி முன்னேற்றம் ஏற்படும். இதுவரையில் இருந்த பாதிப்புகள் நீங்கும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் விலகும். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகள் வந்து சேரும். குழந்தைக்காக ஏங்கியவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். விவசாயிகளின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளை முன்னெடுப்பீர்கள். மாணவர்கள் சூழலைப் புரிந்து கொண்டு பொதுத் தேர்விற்குரிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.சந்திராஷ்டமம்: பிப்.18,19அதிர்ஷ்ட நாள்: பிப்.15,22,24, மார்ச் 4,6பரிகாரம்: துர்கையை ராகு காலத்தில் வழிபட வளம் உண்டாகும்.விசாகம் 1,2,3 ம் பாதம்: அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன், தன, புத்திர காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு அறிவாற்றல் என்பது அதிகபட்சமாக இருக்கும். மற்றவர்களுக்கு ஆலோசனைகள் கூறி வழி நடத்துவதில் முதலிடத்தில் இருப்பீர்கள். இந்த மாதம் உங்களுக்கு யோகமான மாதம் என்றே சொல்ல வேண்டும். அதற்கு காரணம் உங்கள் நட்சத்திரநாதன் ஏழாம் இடத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியை பார்ப்பதுதான். அதன் காரணமாக இதுவரையில் உங்களுக்கிருந்த நெருக்கடி யாவும் விலக ஆரம்பிக்கும். பொருளாதார நிலை உயரும். சமூகத்தில் அந்தஸ்து, செல்வாக்கு உண்டாகும். சிலர் புதிய இடம் வாங்குவீர்கள். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் லாப ஸ்தானத்தையும் குருபகவான் பார்ப்பதால் பொருளாதார நெருக்கடி விலகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் முடிவிற்கு வரும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும் உடல் ரீதியாக இருந்த பிரச்னைகள் விலகுவதுடன் வாழ்க்கையிலும் நன்மை ஏற்படும். திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவற்றிற்காக காத்திருந்தவர்களுக்கு அதற்குரிய பாக்கியம் உண்டாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். தொழிலாளர்களுக்கு இருந்த சங்கடம் விலகும். விவசாயிகளின் நிலையில் மேம்பாடு தோன்றும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவர்.சந்திராஷ்டமம்: பிப். 19,20அதிர்ஷ்ட நாள்: பிப். 15,21,24, மார்ச் 3,6,12பரிகாரம்: திருப்பரங்குன்றம் முருகனை வழிபட நன்மைகள் பெருகும்.
விசாகம் 4 ம் பாதம்: பொன்னுக்கும், புகழுக்கும் காரகனான குரு, தைரிய வீரிய காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு விவேகத்துடன் கூடிய வீரம் இருக்கும். எந்தவொரு முயற்சியிலும் வெற்றி அடைந்திடக் கூடிய சக்தி இருக்கும். இந்த மாதம் உங்கள் ராசிநாதன் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். வியாபாரத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். குருபகவானின் பார்வை உங்கள் குடும்ப, தன ஸ்தானத்திற்கு உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். எதிர்பார்த்த வரவு உண்டாகும். பொருளாதார நெருக்கடி நீங்கும். தொழில் ஸ்தானத்திலும் குருபகவானின் பார்வை பதிவதால் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். வெளிநாட்டு தொடர்புகள் யோகத்தை ஏற்படுத்தும். மாதத்தின் முற்பகுதியில் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பெண்களுக்கு விருப்பம் நிறைவேறும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். தைரியமாக செயல்படுவீர்கள் என்றாலும் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. வயிற்றுப் பகுதியில் ஏதேனும் சங்கடம் தோன்றிக் கொண்டே இருக்கும். அதற்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. உத்தியோகம் புரியும் இடத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். விவசாயிகளுக்கு யோகமான மாதமாக இருக்கும். நீண்ட நாளாக வாங்க நினைத்த இடத்தை இந்த மாதம் வாங்குவீர்கள். விளைச்சலில் வருமானம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியின் மீது அக்கறை உண்டாகும்.சந்திராஷ்டமம்: பிப்.19,20அதிர்ஷ்ட நாள்: பிப்.18,21, மார்ச் 3,9,12.பரிகாரம்: மாரியம்மனுக்கு விளக்கேற்றினால் கஷ்டம் அனைத்தும் தீரும்.அனுஷம்: கர்மகாரகன் மற்றும் ஆயுள்காரகனான சனி, தைரிய வீரிய காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இயல்பாகவே தைரியமும் துணிச்சலும் அதிகபட்சமாக இருக்கும். எந்த ஒன்றிலும் உங்கள் இலக்கை எட்ட வேண்டும் என்ற நோக்கம் அழுத்தமாக இருக்கும். உங்கள் நட்சத்திர நாதன் நான்காம் இடத்தில் சஞ்சரித்தாலும் ராசிநாதன் மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் செயல்கள் யாவும் வெற்றியாகும். அலைச்சல் இருந்தாலும் அதற்கேற்ற ஆதாயம் உண்டாகும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் தடைகளை சந்தித்தாலும் உங்கள் முயற்சியால் அவை விலகும். வருமானத்திற்காக மேற்கொள்ளும் காரியங்கள் லாபத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் மாதத்தின் முற்பகுதியில் உங்களுக்கு யோகத்தை உண்டாக்குவார். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். குடும்பத்தினர் தேவையறிந்து பூர்த்தி செய்வீர்கள். இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் வியாபாரத்தில் கணக்கு வழக்குகளில் கவனமாக இருக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பான செயல்கள் இந்த நேரத்தில் சங்கடத்தை ஏற்படுத்தும். புதபகவானின் சஞ்சார நிலையால் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பெண்களின் விருப்பம் பூர்த்தியாகும். சுயதொழில் செய்ய நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறும். விரயச் செலவுகள் அதிகரித்தாலும் அவற்றினால் ஆதாயமே ஏற்படும். கலைஞர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். குலதெய்வ அருள் உண்டாகும். உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. விவசாயிகளின் முயற்சி வெற்றியாகும். மாணவர்கள் மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.சந்திராஷ்டமம்: பிப். 20,21அதிர்ஷ்ட நாள்: பிப்.17,18,26, மார்ச் 8,9பரிகாரம்: பழநி முருகனை வழிபட முயற்சிகள் வெற்றியாகும்.கேட்டை: கல்வி மற்றும் வித்தைகளுக்கு காரகனான புதன், ரத்த யுத்தக்காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எந்த ஒன்றிலும் திறம்பட செயல்படக்கூடிய ஆற்றல் இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்வீர்கள். இந்த மாதம் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் உங்கள் முயற்சிகளுக்கு துணை புரிவார் என்பதால் எதிர்பார்த்த ஆதாயங்கள் உண்டாகும். சிலர் கோயில் வழிபாட்டில் ஆர்வமுடன் பங்கேற்பீர்கள். புதிய சொத்து சேர்க்கையும் சிலருக்கு ஏற்படும். குருபகவானின் பார்வை குடும்ப ஸ்தானத்திற்கு உண்டாவதால் குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். தொழிலில் இருந்த நெருக்கடிகள் நீங்கி வருமானம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட தொல்லைகள் முடிவிற்கு வரும். இருந்தாலும் நான்காம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி, சூரியனால் உடல் நிலையிலும் மன நிலையிலும் சங்கடங்களை சந்திக்க நேரிடும். அலைச்சல் அதிகரிக்கும். அரசு வழியில் சங்கடங்கள் தோன்றும் என்றாலும் உங்கள் ராசிநாதன் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக் கூடிய திறமை உங்களுக்கேற்படும். பெண்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். பணிபுரியும் இடத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். விவசாயிகளின் விருப்பம் பூர்த்தியாகும். மாணவர்கள் இந்த நேரத்தில் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவதால் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும்.சந்திராஷ்டமம்: பிப். 21,22அதிர்ஷ்ட நாள்: பிப்.18,23, மார்ச் 5,9பரிகாரம்: உலகளந்த பெருமாளை வழிபட தடைகள் விலகும்.
மூலம்: தன புத்திரக்காரகனான குரு, ஞான மோட்ச காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தெய்வ அருள் எப்போதும் இருக்கும். எல்லாவற்றையும் சிந்தித்து செயல்படக் கூடியவர்களாக நீங்கள் இருப்பீர்கள். இந்த மாதத்தில் உங்கள் ராசிநாதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியை பார்ப்பதால் உங்கள் நிலையில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும். அந்தஸ்தும், செல்வாக்கும் உயரும். தெய்வ அருள் முழுமையாக உங்களுக்கு ஏற்படும். லாப ஸ்தானத்திற்கும் குருபகவானின் பார்வை பதிவதால் வருமானத்தில் இருந்த நெருக்கடி விலகி எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். குழந்தைக்காக ஏங்கியவர்களுக்கு அந்த பாக்கியம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். விவசாயிகள் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகி ஆதாயமான நிலை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் உண்டாகும்.சந்திராஷ்டமம்: பிப். 22,23அதிர்ஷ்ட நாள்: பிப்.16, 21, 25, மார்ச் 3,7,12பரிகாரம்: முருகனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.பூராடம்: அறிவாற்றலையும் அந்தஸ்தையும் வழங்கும் குருபகவான், அதிர்ஷ்டக் காரகனான சுக்கிரனுடைய அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு எந்த ஒன்றிலும் ஆழ்ந்த அறிவு இருக்கும். தெளிவான சிந்தனை இருக்கும். எந்த ஒன்றிலும் யோசிக்காமல் ஈடுபட மாட்டீர்கள். இந்த மாதத்தில் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் ராஜ கிரகமான சூரியனும், கர்ம காரகனான சனிபகவானும் சஞ்சரிப்பதால் இதுவரையில் உங்களுக்கிருந்த சங்கடங்கள் விலகும். சமூகத்தில் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். அரசு வழியில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஆதாயம் ஏற்படும். தெய்வ அருளால் செயல்கள் அனைத்தும் வெற்றியாகும். உங்கள் நட்சத்திரநாதன் ராசிக்குள்ளாகவே சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். குடும்பம், தொழில், வியாபாரம் போன்றவற்றில் இருந்த நெருக்கடி விலகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். பணியிடத்தில் பணியாளர்களின் மதிப்பு அதிகரிக்கும். பணியில் இருந்த சங்கடங்கள் விலகும். உடல்நிலையில் ஆரோக்கியம் ஏற்படும். பெண்களுக்கு இந்த மாதம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த சங்கடங்கள் விலகும். திருமண வயதினருக்கு வரன் வந்து சேரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணத்திற்குரிய நல்ல சூழ்நிலை ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். அரசுவழியில் ஆதாயமான நிலை ஏற்படும். விவசாயிகளுக்கு யோகமான மாதமாக இருக்கும். விளைபொருளுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கும். மாணவர்கள் மாதத்தின் பிற்பகுதியில் கல்வியில் ஆர்வம் காட்டுவர். சந்திராஷ்டமம்: பிப்.23,24.அதிர்ஷ்ட நாள்: பிப்.15,21,மார்ச் 3,6,12பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கினால் செல்வம் பலமடங்கு உயரும். உத்திராடம் 1ம் பாதம்: ஞானக்காரகன் குரு, ஆற்றல் காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு அறிவாற்றலோடு எந்த ஒன்றையும் செய்து முடிக்கும் தைரியமும் துணிச்சலும் இருக்கும். திட்டமிட்டு செயல்படக் கூடியவர்களாக  இருப்பீர்கள். இந்த மாதம் உங்கள் நட்சத்திர நாதன் மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். அரசு வழியில் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மூன்றாம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பதவி வந்து சேரும். மக்கள் செல்வாக்கு உண்டாகும். குருபகவான் பார்வை உங்கள் ராசிக்கு உண்டாவதால் இக்காலத்தில் குடும்பம், வாழ்க்கை, தொழிலில் எதிர்பார்ப்பு நிறைவேறும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். பெண்களுக்கு யோகமான மாதமாக இருக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். விவசாயிகளின் விலைபொருளுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவதால் மதிப்பெண் கூடும். சந்திராஷ்டமம்: பிப். 24,25அதிர்ஷ்ட நாள்: பிப். 19,21,28,மார்ச் 1,3,10,12.பரிகாரம்: வீரபத்திரரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
உத்திராடம் 2,3,4 ம் பாதம்: ஆயுள் காரகன் கர்மக் காரகனான சனி பகவான், ஆத்ம காரகனான சூரியன் அம்சத்தின் பிறந்த உங்களுக்கு ஒருபக்கம் செயலில் வேகம் இருக்கும். மறு பக்கம் நிதானித்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இந்த இரண்டிற்கும் இடையில் உங்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும். இந்த மாதம் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான் உங்கள் முயற்சிகளை லாபமாக்குவார். முன்னேற்றத்தை உண்டாக்குவார். வெளிநாட்டு தொடர்புகளின் வழியாக ஆதாயத்தை ஏற்படுத்துவார். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். இரண்டாம் இடத்தில் சனிபகவானும் சூரியனும் சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் நெருப்பு வெளிப்படும். குடும்பத்தில் நீங்கள் எதிர்பார்த்த நிலை இல்லாமல் போகும். மற்றவர்களின் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்பதால் முடிந்தவரை அமைதி காப்பது நல்லது. குருபகவானின் பார்வை உங்கள் தொழில் ஸ்தானத்தில் பதிவதால் தொழில் மீது கூடுதல் கவனம் செலுத்துங்கள். லாபம் அதிகரிக்கும். விழிப்புடன் செயல்படுங்கள். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள். புதிய தொழில் முயற்சிகளில் யோசித்து இறங்குங்கள். பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தெய்வ அருள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். குடும்பத்திற்குள் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. விவசாயிகளுக்கு வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பின் மீது அதிக அக்கறை செலுத்துவது அவசியம். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது நன்மை தரும்.சந்திராஷ்டமம்: பிப். 24,25அதிர்ஷ்ட நாள்: பிப்.17,18,26, மார்ச் 8,10பரிகாரம்: நரசிம்மரை வணங்கினால் மனதில் நிம்மதி நிலைக்கும். திருவோணம்: மனக் காரகனான சந்திரன், ஆயுள் காரகனான சனிபகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு மன வலிமை அதிகமாக இருக்கும். எந்த ஒரு செயலிலும் நீங்கள் வெற்றி பெறும் வரை உங்கள் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இந்த மாதம் உங்களுக்கு சுக்கிர பகவான் உங்கள் ஜென்ம ராசிக்குள்ளும் குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். எதிர்பார்த்த வரவு இருக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். குருபகவானின் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் செய்யும் தொழிலை விரிவு செய்வீர்கள். தொழிலுக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். சனிபகவானின் பார்வை லாப ஸ்தானத்தில் பதிவதால் தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பொருளாதார நெருக்கடி விலகும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். சிலர் வெளிநாட்டு தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டு லாபம் காண்பீர்கள். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் சுமூகமாகும். செல்வாக்கு அதிகரிக்கும். பெண்களின் விருப்பங்கள் இந்த மாதம் எளிதாக நிறைவேறும். சிலர் தங்கள் பெயரில் இடம் வாங்குவர். புதிய வீட்டில் குடியேறுவீர்கள். குடும்பத்திற்குள் சலசலப்புகள் வந்து செல்லும் என்றாலும் அதை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடல்நிலையில் சங்கடம் விலகி ஆரோக்கியமாக செயல்படுவீர்கள். விவசாயிகள் புதிய முயற்சியில் ஈடுபட்டு லாபம் அடைவர். மாணவர்களுக்கு கல்வியில் அதிக அக்கறை தேவை.சந்திராஷ்டமம்: பிப்.25.அதிர்ஷ்ட நாள்: பிப்.17,20,26, மார்ச் 2,8,11பரிகாரம் சிவனை பிரதோஷத்தன்று வழிபட்டால் பிரச்னை விலகும்.அவிட்டம் 1,2 ம் பாதம்: தைரிய வீரிய பராக்ரம காரகனான செவ்வாய், ஆயுள் காரகனான சனியின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு, ஒவ்வொரு செயலிலும் அதிக முயற்சி தேவைப்படும். சில நேரங்களில் அதில் தடைகளும் ஏற்படும் என்றாலும், துணிச்சலுடன் செயல்படுவீர்கள். நினைத்ததை சாதிக்கும் வரை ஓயாமல் உழைப்பீர்கள். இந்த மாதம் ராசிக்குள் உங்கள் நட்சத்திரநாதன் செவ்வாய் சஞ்சரிப்பதால் செயல்களில் வேகம் இருக்கும். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வெளிநாட்டு தொடர்புடைய வியாபாரங்களில் ஆதாயம் அதிகரிக்கும். தொழிற்சாலை, ஹார்டுவேர்ஸ், பேக்டரி, ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் போன்ற தொழில்கள் செய்வோருக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். சுக்கிர பகவான் மாதம் முழுவதும் ஜென்ம ராசி, இரண்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். பெண்களுக்கு இது யோகமான மாதம். குரு பகவானின் பார்வை உடல் நிலையில் இருந்த சங்கடங்களை விலக்கும். சுயதொழில் செய்வோருக்கு ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்களின் சங்கடங்கள் விலகும். விவசாயிகள் நவீன விவசாயத்தில் ஈடுபட்டு லாபம் காண்பர். கால்நடை வளர்ப்பில் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் ஏற்படும்.சந்திராஷ்டமம்: பிப்.26அதிர்ஷ்ட நாள்: பிப்.17, 18, 26, மார்ச் 8,9பரிகாரம் அனுமனை வழிபட்டால் அல்லல் எல்லாம் நீங்கும்.
அவிட்டம் 3,4 ம் பாதம்: சகோதர, தைரிய, வீரிய காரகனான செவ்வாய், கர்ம காரகனான சனி பகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எல்லாவிதமான சக்திகளும் நிறைந்திருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் செயல்களை முடிக்கின்ற வரையில் அதற்குரிய பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். இந்த மாதம் உங்கள் ஜென்ம ராசிக்குள் ராசிநாதன் சஞ்சரிப்பதுடன் சூரியனும் இணைந்துள்ளார். அதன் காரணமாக மனதில் பதட்டமும் செயல்களில் குழப்பமும், நிதானம் இல்லாத தன்மையும் ஏற்படும். இந்த நேரத்தில் முயற்சிகளில் முழுமையான கவனம் தேவை. யோசிக்காமல் எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம். இந்த நெருக்கடியான நேரத்தில் குரு பகவான் பார்வை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரியோரின் ஆசிர்வாதம் கிடைக்கும். தொழிலில் இருந்த தடைகள் விலகி வருமானம் வர ஆரம்பிக்கும். அரசு அலுவலர்கள் பணியாளர்கள் தங்களுடைய வேலைகளில் கவனமாக இருப்பது மிக அவசியம். இல்லையெனில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. பெண்கள் குடும்ப நலனில் கூடுதல் அக்கறை செலுத்தி வருவதுடன் வார்த்தைகளில் கவனம் செலுத்துவது நன்மையாக இருக்கும். உடல் நலனிலும் அக்கறை கொள்ள வேண்டும். மாணவர்கள் கல்வியில் முழுமையான கவனத்தை செலுத்தி வருவது அவசியமாகும்.சந்திராஷ்டமம்: பிப். 27அதிர்ஷ்ட நாள்: பிப்.17,18,26. மார்ச் 8,9பரிகாரம் அபிராமி அந்தாதியை தினமும் படிக்க விருப்பம் நிறைவேறும். சதயம்: யோக காரகனான ராகு, கர்ம காரகனான சனி பகவானின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு வாழ்வில் நெளிவு சுளிவுகள் அனைத்தும் தெரிந்திருக்கும். எப்படி எதை அடைவது என்ற வழிகளையும் அறிந்திருப்பீர்கள். இந்த மாதம் உங்கள் நட்சத்திரநாதன் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வார்த்தைகளின் நிதானம் அவசியம். பொருள் வரவிற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். தடைபட்டிருந்த பணம் வந்து சேரும். வெளிநாட்டு முயற்சிகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். ஜென்ம ராசிக்குள் ராசிநாதன் சஞ்சரிப்பதால் மனதில் வீண் குழப்பம், சங்கடம் தோன்றும். அரசுவழி செயல்கள் இழுபறியாகும். சிலருக்கு சட்ட சிக்கல்கள் தோன்ற வாய்ப்பிருக்கிறது. விரய ஸ்தானத்தில் பூமிகாரகன் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீண்ட நாளாக விற்பனையாகாமல் இருந்த இடங்கள் இப்போது விற்பனையாக வழி பிறக்கும். சிலர் புதிய சொத்துகளை வாங்குவர். அஷ்டம ஸ்தானத்தில் கேதுபகவான் சஞ்சரிப்பதால் எப்போதும் விழிப்புடன் இருப்பது நல்லது. உங்களுடன் இருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்படும் நிலை தோன்றும். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு அத்தகைய நிலையை உருவாக்குவார். நட்புகள் உங்களை விட்டு விலகும் நிலை ஏற்படலாம். இருந்தாலும் சனிபகவானின் பத்தாமிடத்தின் மீதான பார்வையும், குருபகவானின் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் தொழிலில் தடைகள் விலகும் தொழிலுக்கான முயற்சிகள் வெற்றியாகும். பணம் பலவழிகளில் வர ஆரம்பிக்கும். குடும்பம், தொழிலில் இருந்த சங்கடம் விலகும். பெண்கள் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது நல்லது. மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் கணவரின் உடல் நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். குடும்பத்தை திட்டமிட்டு நடத்துவதும், வரவு செலவில் கவனமாக இருப்பதும் நன்மை தரும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியர்களின் ஆலோசனையால் நன்மை உண்டாகும்.சந்திராஷ்டமம்: பிப்.27அதிர்ஷ்ட நாள்: பிப்.17,22,26, மார்ச் 4,8,13பரிகாரம் திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரரை வணங்க வாழ்வு சிறக்கும். பூரட்டாதி 1,2,3 ம் பாதம்: தன புத்திர காரகனான குரு, ஆயுள் காரகனான சனிபகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எப்பொழுதும், செல்வாக்கும் அந்தஸ்தும் இருக்கும். மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக  இருப்பீர்கள். உங்கள் வார்த்தைகளுக்கு எல்லா இடத்திலும் மதிப்பிருக்கும். இந்த மாதம் உங்கள் நட்சத்திரநாதன் மூன்றாம் இடத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகள் ஏழு, ஒன்பது, பதினொன்றாம் இடங்களில் பதிவதால் திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். தந்தைவழியில் ஆதரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவு வரும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். ராசிநாதன் ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்தாலும் அவருடைய மூன்று, பத்தாம் பார்வைகளால் முயற்சிகள் வெற்றியாகும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். அலுவலகத்தில் உண்டான சங்கடங்கள் நீங்கும். சுயதொழில் செய்பவர்கள் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவர். இருந்தாலும் உடல் நிலையில் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். இயந்திரம், வாகனங்களை இயக்கும் போதும் விழிப்புணர்வு அவசியம். பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். திருமணத்திற்காக காத்திருந்த சிலருக்கு வரன் தேடி வரும். தெய்வ அருள் கிடைக்கும். நட்புகளால் ஆதாயம் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். மாணவர்கள் இப்போது கல்வியில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும் மாதத்தின் பிற்பகுதியில் ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பது நன்மையளிக்கும்.சந்திராஷ்டமம்: பிப்.28அதிர்ஷ்ட நாள்: பிப்.17, 21, 26, மார்ச் 3,8,12பரிகாரம் மகாலிங்கேஸ்வரரை வணங்கினால் மனக்கவலை தீரும்.
பூரட்டாதி 4 ம் பாதம்: ஞானம், தனம், அந்தஸ்திற்கு காரகனான குருபகவானின் அம்சத்தை பரிபூரணமாக கொண்டிருக்கும் உங்களுக்கு எந்த ஒன்றையும் கணித்து அதன்படி நடந்திடும் ஆற்றல் இருக்கும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறி வழிநடத்துவதிலும் முதன்மையானவராக இருப்பீர்கள். இந்த மாதம் குருபகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்து 6,8,10 ம் இடங்களைப் பார்ப்பதால் உடல் ரீதியான சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். மறைமுகத் தொல்லைகள் விலகும். உங்கள் செல்வாக்கிற்கு ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலர் புதிய தொழில் தொடங்குவதற்கு முயற்சி செய்வீர்கள். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதம். திருமண வயதினருக்கு  வரன் தேடி வரும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாடு செல்வதற்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகி நிம்மதி உண்டாகும். விவசாயிகளுக்கு யோகமான மாதமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் பெறுவர்.சந்திராஷ்டமம்: பிப். 28அதிர்ஷ்ட நாள்: பிப். 21, மார்ச் 3,12பரிகாரம் தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் தடைகள் பறந்தோடும். உத்திரட்டாதி: ஆயுள் மற்றும் கர்ம காரகனான சனிபகவான், தன புத்திர காரகனான குருவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு நிர்வாக ஆற்றல் நிறைந்திருக்கும். சுயமாக முயற்சிகள் மேற்கொண்டு அதில் வெற்றி பெறக் கூடியவர்களாக இருப்பீர்கள் என்றாலும் சில தடைகள் உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். இந்த மாதம் உங்கள் குடும்பாதிபதியும், பாக்கியாதிபதியுமான செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, சூரியன் உண்டாக்கும் பாதிப்புகளில் இருந்து விடுபடுவீர்கள். தெய்வ அனுகூலமும், பொருள் சேர்க்கையும் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். புதிய இடம் வாங்கும் முயற்சி, புதிய வீட்டில் குடியேறுதல் என்ற உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். சுக்கிர பகவானும் இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை சிலருக்கு ஏற்படும். பெண்களுக்கு குடும்ப பொறுப்பு அதிகரிக்கும். வேலையில் இருந்த நெருக்கடி விலகும். வாழ்க்கைத்துணையுடன் சில சங்கடங்கள் தோன்றி மறையும் என்பதால் வார்த்தைகளில் நிதானம் தேவை. வெளியூர், வெளிநாடு செல்ல நினைத்தவர்களின் விருப்பம் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவர்.சந்திராஷ்டமம்: பிப். 29அதிர்ஷ்ட நாள்: பிப். 17,21,26, பிப்.3,8,12பரிகாரம் பைரவரை வணங்கினால் மனபலம் அதிகரிக்கும். ரேவதி: கல்வி, அறிவு, வித்தை காரகனான புதன், ஞானக்காரகனான குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எந்தவொரு செயலிலும் சாதுர்யமும் சாமர்த்தியமும் நிறைந்திருக்கும். உங்களை முன்னிறுத்திக் கொள்வதற்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். அதில் வெற்றியும் அடைவீர்கள். இந்த மாதம் உங்கள் ராசிநாதன் இரண்டாம் இடமான தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரையில் இருந்த நெருக்கடிகள் விலகும். ஏழரைச் சனியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் உண்டாகும். சூரிய பகவான் 12 ல் சஞ்சரிப்பதால் அரசு வழியில் சில நெருக்கடிகள் தோன்றும். வியாபாரிகள் வரவு செலவு விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வருமானம் வரும். இடம் வாங்கி விற்கும் முயற்சி லாபம் தரும். விவசாயத்தில் இருந்த தடைகள் விலகும். மருத்துவம், கெமிக்கல், ஓட்டல், பெட்ரோலிய தொழில்களில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு ஒருபக்கம் நெருக்கடி ஏற்பட்டாலும் மறுபக்கம் அதை சமாளிக்கும் சக்தி உண்டாகும். உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும். ஜென்ம ஸ்தானத்தில் ராகு, 7 ல் கேது சஞ்சரிப்பதால் நட்பு வட்டத்தில் எச்சரிக்கை தேவை. பேராசையால் தவறில் ஈடுபடுவோருக்கு அரசு வகையில் சங்கடங்கள் தோன்றும். பெண்களுக்கு யோகமாகமான மாதம். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொன், பொருள் சேரும்.  குடும்பத்தில் அக்கறை செலுத்துவதும் வாழ்க்கைத் துணைவரை அனுசரித்துச் செல்வதும் நன்மை தரும். விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும். வெளிநாட்டு முயற்சிகள் ஆதாயம் தரும். மாணவர்கள் கல்வியில் அக்கறை செலுத்துவதும் ஆசிரியர்களின் ஆலோசனையை பின்பற்றுவதும் நன்மை தரும். சந்திராஷ்டமம்: மார்ச் 1அதிர்ஷ்ட நாள்: பிப்.21,23, மார்ச் 3,5,12பரிகாரம்: லட்சுமி நரசிம்மர் வழிபாடு நலம் தரும்.
Advertisement Tariff
Advertisement


      Our Apps Available On




      Dinamalar

      Follow us