/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மலைவாழ் சங்கம் போராட்டம் 50க்கும் மேற்பட்டோர் கைதுமலைவாழ் சங்கம் போராட்டம் 50க்கும் மேற்பட்டோர் கைது
மலைவாழ் சங்கம் போராட்டம் 50க்கும் மேற்பட்டோர் கைது
மலைவாழ் சங்கம் போராட்டம் 50க்கும் மேற்பட்டோர் கைது
மலைவாழ் சங்கம் போராட்டம் 50க்கும் மேற்பட்டோர் கைது
ADDED : பிப் 10, 2024 07:42 AM
ஓசூர் : சூளகிரி அருகே, ஓபேபாளையத்தில் குடியிருக்கும் பழங்குடியின மக்களுக்கு, 40 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா, இலவச தொகுப்பு வீடுகள், மின் இணைப்பு, சாலை வசதி செய்து கொடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், சூளகிரி தாலுகா அலுவலகம் முன் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் குமரவடிவேல் தலைமை வகித்தார். தொடர்ந்து, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால், 11 பெண்கள் உட்பட, 50 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். கோரிக்கை நிறைவேறும் வரை மண்டபத்தில் இருந்து செல்லமாட்டோம் எனக்கூறி, நேற்றிரவு வரை காத்திருப்பு போராட்டம் நடந்தது.