ADDED : பிப் 10, 2024 12:31 AM
திருப்பூர்;திருப்பூரில் உதயநிதி, கனிமொழி பங்கேற்கவுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்க கட்சி நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர். தி.மு.க., திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ், தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் ஆகியோர் தனித்தனியே விடுத்துள்ள அறிக்கை:
திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி வளாகத்தில் திருப்பூர் மாநகராட்சி புதிய குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி 11ம் தேதி (நாளை) காலை 9:00 மணிக்கு நடக்கிறது. இதில் அமைச்சர்கள் உதயநிதி, நேரு, சாமிநாதன், கயல்விழி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
அதே போல், எம்.பி., கனிமொழி தலைமையிலான லோக்சபா தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு லோக்சபா தொகுதிவாரியாக பல்வேறு அமைப்புகளிடம் கருத்து கேட்பு ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. பூண்டி பாப்பீஸ் ஓட்டலில் 10ம் தேதி (இன்று) பகல் 2:00 மணிக்கு இக்கூட்டம் நடக்கிறது. இந்த இரு நிகழ்ச்சிகளிலும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.