டி-20 உலக கோப்பை : வெற்றியுடன் துவக்கியது இந்தியா
டி-20 உலக கோப்பை : வெற்றியுடன் துவக்கியது இந்தியா
டி-20 உலக கோப்பை : வெற்றியுடன் துவக்கியது இந்தியா
ADDED : ஜூன் 06, 2024 12:17 AM

நியூயார்க்: டி-20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியை வெற்றியுடன் துவக்கியது இந்தியா. இன்று (05ம் தேதி) நடந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. இன்று (05ம் தேதி) நியூயார்க்கில் உள்ள நாசவ் கவுன்டி மைதானத்தில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
பேட்டிங் செய்ய களம் இறங்கிய அயர்லாந்து அணி 16 ஓவரில் 96 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பென் ஒயிட் (2) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் பாண்ட்யா 3, அர்ஷ்தீப், பும்ரா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித், மார்க் அடைர் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதம் எட்டினார். இவர் 52 ரன்னில் 'ரிட்டயர்ட் ஹர்ட்' ஆனார். இந்திய அணி 12.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 97 ரன் எடுத்து வெற்றி துவக்கியது இந்திய அணி.