/உள்ளூர் செய்திகள்/தேனி/செங்கல் உற்பத்திக்கு தேவையான மண் கம்பம் பகுதியில் பெற அனுமதி தேவைசெங்கல் உற்பத்திக்கு தேவையான மண் கம்பம் பகுதியில் பெற அனுமதி தேவை
செங்கல் உற்பத்திக்கு தேவையான மண் கம்பம் பகுதியில் பெற அனுமதி தேவை
செங்கல் உற்பத்திக்கு தேவையான மண் கம்பம் பகுதியில் பெற அனுமதி தேவை
செங்கல் உற்பத்திக்கு தேவையான மண் கம்பம் பகுதியில் பெற அனுமதி தேவை
ADDED : பிப் 10, 2024 05:43 AM
கம்பம்: கம்பத்தில் செங்கல் உற்பத்திக்கு தேவையான மண் இப் பகுதியிலே பெற கனிம வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூளை உரிமையாயர்கள் கோரியுள்ளனர்.
கம்பத்தில் 35 க்கும் மேற்பட்ட சூளைகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. - உற்பத்திக்கு தேவையான களிமண், செம்மண் போன்றவைகள் தட்டுப்பாட்டால் கூடுதல் விலைக்கு போடி அருகே உள்ள ராசிங்காபுரம், சிலமலை கிராமங்களில் இருந்து வருகிறது. இதனால் உற்பத்தி செலவு அதிகரித்து வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கம்பம் பகுதியிலேயே மண் கிடைத்தது. ஆனால் கனிம வளத்துறை அனுமதி சீட்டு வழங்காததால், போடி பகுதியில் இருந்து வாங்குகின்றனர். 4 யூனிட் மண் ரூ.10 ஆயிரம் வரை ஆகிறது. இதனால் உற்பத்தி செலவு அதிகரிக்கிறது.
தற்போது செங்கல் விலை சற்று உயரத் துவங்கி உள்ளது. 1000 செங்கல் விலை ரூ.6 ஆயிரம் விற்கிறது. ஆனால் ரூ. 6500 கிடைத்தால் தான் கட்டுபடியாகும் என்கின்றனர்.
இது தொடர்பாக கம்பம் செங்கள் சூளை உரிமையாளர் கிருஷ்ணன் கூறுகையில், மூலம் பொருள் தட்டுப்பாட்டு மற்றும் விலை உயர்வு உரிமையாளர்களை பாதிக்கிறது.
எனவே கம்பம் பகுதியில் அனுமதி சீட்டு வழங்கி மண் இங்கேயே பெற கனிம வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.