ADDED : பிப் 10, 2024 01:06 AM

கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடிகள், காய்கறி கடைகள் போன்றவற்றை நடத்துகின்றன. கூட்டுறவு அங்காடிகளில் விற்பனையாகாமல் தேங்கும் மளிகை, காய்கறிகள் போன்றவை, ரேஷன் ஊழியர்களுக்கு கட்டாயமாக விற்கப்படுகின்றன. அதற்காக பிடித்தம் செய்யப்படும் சம்பள விபரத்தை ஊழியர்களிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால், பல கூட்டுறவு சங்கங்கள், சம்பள பட்டியலை ஊழியர்களுக்கு தருவதில்லை.
அப்படியே சில சங்கங்கள் தந்தாலும், சம்பளம் பிடித்தம் மொத்தமாக இருக்கிறதே தவிர, எதற்காக எவ்வளவு ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது என்ற தகவல் இல்லை.
- ஜி.ராஜேந்திரன்
தலைவர், அரசு ரேஷன் கடை
பணியாளர்கள் சங்கம்.