/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/போலீஸ் தொப்பியை அணிந்து பயணிகளை அலற விட்ட நபர்போலீஸ் தொப்பியை அணிந்து பயணிகளை அலற விட்ட நபர்
போலீஸ் தொப்பியை அணிந்து பயணிகளை அலற விட்ட நபர்
போலீஸ் தொப்பியை அணிந்து பயணிகளை அலற விட்ட நபர்
போலீஸ் தொப்பியை அணிந்து பயணிகளை அலற விட்ட நபர்
ADDED : பிப் 10, 2024 01:07 AM

குன்னுார்;குன்னுாரில் போக்குவரத்து போலீசின் தொப்பியை எடுத்து சென்று, அணிந்து பயணிகளை அலற விட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னுார் பஸ் ஸ்டாண்டில் புறக்காவல் நிலையம் உள்ளது. இங்கு வைத்திருந்த போக்குவரத்து காவலரின் தொப்பியை ஒரு நபர் எடுத்து சென்றார். அப்போது, திருச்சியில் இருந்து ஊட்டி நோக்கி சென்ற அரசு பஸ் லெவல் கிராசிங் அருகே நிறுத்தி இருந்த நிலையில், பஸ்சில் ஏறிய அந்த நபர், அந்த தொப்பியை அணிந்து கொண்டு பயணிகளிடம், 'எல்லோரும் டிக்கெட் எடுத்தீர்களா; எடுங்கள்,' என, அதிகார தோரணையில் பேசினார்.
அதிர்ச்சியடைந்த கண்டக்டர், டிரைவர் ஆகியோர் கீழே இறங்க கூறியும் இறங்காமல் இருந்தார். அப்போது, போலீஸ்காரர் ஒருவர் வந்து மிரட்டிய பிறகு தொப்பியை கழற்றி பஸ்சை விட்டு கீழே இறங்கினார்.
விசாரணையில், 'அவர் மன நிலை பாதிக்கப்பட்டவர்,' என, அறிந்து அவரை போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குன்னுாரில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.