/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இ.சி.ஆர்., - விழுப்புரம் சாலையை இணைக்க புறவழிச்சாலை திட்டம் பரிந்துரை: மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்இ.சி.ஆர்., - விழுப்புரம் சாலையை இணைக்க புறவழிச்சாலை திட்டம் பரிந்துரை: மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்
இ.சி.ஆர்., - விழுப்புரம் சாலையை இணைக்க புறவழிச்சாலை திட்டம் பரிந்துரை: மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்
இ.சி.ஆர்., - விழுப்புரம் சாலையை இணைக்க புறவழிச்சாலை திட்டம் பரிந்துரை: மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்
இ.சி.ஆர்., - விழுப்புரம் சாலையை இணைக்க புறவழிச்சாலை திட்டம் பரிந்துரை: மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்
ADDED : பிப் 10, 2024 06:11 AM
புதுச்சேரி : கிழக்கு கடற்கரை சாலையுடன், விழுப்புரம் நெடுங்சாலையை இணைக்கும் புறவழிச்சாலை திட்டம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நித்தின் கட்கரி தெரிவித்துள்ளார்.
லோக்சபா கூட்ட தொடரில் பங்கேற்ற புதுச்சேரி காங்., எம்.பி., வைத்திலிங்கம், புதுச்சேரி இந்திரா சிக்னல், ராஜிவ் சிக்னல் இணைக்க முன்மொழிப்பட்ட மேம்பால திட்டம் தற்போதைய நிலை என்ன, இப்பணி எப்போது தொடங்கி முடிக்கப்படும் என, கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி அளித்துள்ள பதில்;
புதுச்சேரி இந்திரா சிக்னல், ராஜிவ் சிக்னல் இணைக்கும் உத்தேச மேம்பாலத்திற்கு விரிவான திட்ட அறிக்கை பணி அன்றயை முதல்வர் வேண்டுகோளின்படி, புதுச்சேரி பொதுப்பணித்துறையால் ஆலோசனை நிறுவனத்திடம் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் வழங்கப்பட்டது.
அந்நிறுவனம் விரிவான வரைவு திட்ட அறிக்கை தயாரித்து ஒப்படைத்துள்ளது.
தற்போது இந்த இரண்டு சதுக்கங்களும் அமைந்துள்ள சாலை பகுதி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பராமரிப்பில் உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆய்வு மேற்கொண்டு, சென்னையில் இருந்து வரும் கிழக்கு கடற்கரை சாலையில், காலாப்பட்டில் இருந்து புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை குறுக்காக கடந்து, புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைப்பதற்கு, புறவழிச்சாலை திட்டம் ஒன்றை பரிந்துரை செய்துள்ளது.
இச்சாலை அமையும் பட்சத்தில் ராஜிவ் சதுக்கம், இந்திரா சதுக்கத்தை தவிர்த்து மாமல்லபுரத்தில் இருந்து வரும் வாகனங்கள் விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதாக செல்லும் என, தெரிவித்தார்.