தமிழகத்தில் ஒரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஒரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஒரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு
UPDATED : ஜூன் 23, 2024 02:04 PM
ADDED : ஜூன் 23, 2024 08:47 AM

புதுடில்லி: தமிழகத்தில் இன்று (ஜூன்23) ஒரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இது போல் கேரளா, கர்நாடகாவில் அதி கன மழை பெய்யும் என்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டடுள்ளது.
வட மாநிலங்களான மேற்குவங்கம், ஜார்கண்ட், பீகார், ஒடிசா, அந்தமான், உள்ளிட்ட மாநிலங்களிலும் வரும் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. உ.பி.,யின் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.