/உள்ளூர் செய்திகள்/தேனி/மூணாறு இடைத்தேர்தல் 2வார்டுகளில் 5 பேர் போட்டிமூணாறு இடைத்தேர்தல் 2வார்டுகளில் 5 பேர் போட்டி
மூணாறு இடைத்தேர்தல் 2வார்டுகளில் 5 பேர் போட்டி
மூணாறு இடைத்தேர்தல் 2வார்டுகளில் 5 பேர் போட்டி
மூணாறு இடைத்தேர்தல் 2வார்டுகளில் 5 பேர் போட்டி
ADDED : பிப் 10, 2024 05:52 AM
மூணாறு: மூணாறு ஊராட்சியில் 11(மூலக்கடை), 18 (நடையார்) ஆகிய வார்டுகளைச் சேர்ந்த காங்., உறுப்பினர்கள் 2021 டிசம்பரில் கட்சியில் இருந்து விலகி இடதுசாரி கூட்டணி கட்சிகளில் இணைந்தனர். அவர்களை கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் பொறுப்புகளில் இருந்து தகுதி நீக்கம் செய்து தேர்தல் கமிஷன் கடந்த அக்.12ல் உத்தரவிட்டது.
அதனால் இரண்டு வார்டுகளில் இடைத் தேர்தல் பிப்.22ல் நடக்கிறது. அதற்கு இரண்டு வார்டுகளிலும் 14 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஒன்பது மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன.
தற்போது இரண்டு வார்டுகளிலும் ஐந்து வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
11ம் வார்ட்டில் காங்., சார்பில் நடராஜன், இடதுசாரி கூட்டணியில் ராஜ்குமார், பா.ஜ., சார்பில் சுபாஷ், 18ம் வார்ட்டில் காங்., சார்பில் லெட்சுமி, இடது சாரி கூட்டணியில் நவநீதம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இரண்டு வார்டுகளிலும் இரு கூட்டணி கட்சியினரும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.