Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/பி.என்.ஐ., --- லயன்ஸ் கிளப் நடத்திய தொழில் முனைவோர் 'லாபம் 24' நிகழ்ச்சி

பி.என்.ஐ., --- லயன்ஸ் கிளப் நடத்திய தொழில் முனைவோர் 'லாபம் 24' நிகழ்ச்சி

பி.என்.ஐ., --- லயன்ஸ் கிளப் நடத்திய தொழில் முனைவோர் 'லாபம் 24' நிகழ்ச்சி

பி.என்.ஐ., --- லயன்ஸ் கிளப் நடத்திய தொழில் முனைவோர் 'லாபம் 24' நிகழ்ச்சி

ADDED : பிப் 09, 2024 10:10 PM


Google News
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள என்.பி.ஆர்., திருமண மண்டபத்தில், பி.என்.ஐ., காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மண்டலம், நந்திவரம்- -- கூடுவாஞ்சேரி லயன்ஸ் கிளப் இணைந்து, ஒரு மாபெரும் நெட்வொர்க்கிங்க்கான 'லாபம் 24' என்ற நிகழ்ச்சியை, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழில் முனைவோருக்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை, லயன்ஸ் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி மதியழகன் மற்றும் நகராட்சி தலைவர் கார்த்திக் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதில், பல்வேறு துறைகளை சார்ந்த தொழில் முனைவோர் அரங்குகள் அமைத்திருந்தனர். நிகழ்ச்சியை, பி.என்.ஐ., மண்டல நிர்வாக இயக்குனர்கள் ராகவ் கவுஷிக் மற்றும் சுபாஷ் ஆகியோர் ஏற்று நடத்தினர்.

பிட்ஸ் அண்டு பைட்ஸ் உரிமையாளர் ஆனந்த் பாபு, ஜோதிடர் சீனிவாச ராமன், எஸ்.டி.எல்., டூர்ஸ் அண்டு ஹாலிடேஸ் உரிமையாளர் விஜயகுமார் ஆகியோர் நிகழ்ச்சியை முன் நின்று நடத்தினர்.

இந்நிகழ்ச்சியின் டைட்டில் ஸ்பான்சர் நியூட்ரல் சோலார் சூரிய சக்தி நிறுவனம் பற்றியும், அதன் பயன்களை பற்றியும், அதன் நிர்வாக இயக்குனர் அஜய் திவாகரன் விளக்கினார்.

நிகழ்ச்சியில், பல்வேறு தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர், பி.என்.ஐ., நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us