/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/2 வீடுகளின் சுவர்களுக்கு இடையே தவறி விழுந்தவர் பரிதாப சாவு2 வீடுகளின் சுவர்களுக்கு இடையே தவறி விழுந்தவர் பரிதாப சாவு
2 வீடுகளின் சுவர்களுக்கு இடையே தவறி விழுந்தவர் பரிதாப சாவு
2 வீடுகளின் சுவர்களுக்கு இடையே தவறி விழுந்தவர் பரிதாப சாவு
2 வீடுகளின் சுவர்களுக்கு இடையே தவறி விழுந்தவர் பரிதாப சாவு
ADDED : பிப் 10, 2024 06:12 AM
புதுச்சேரி: ஏனாமில் குடிபோதையில் இரு வீட்டின் சுவர்களுக்கு இடையே தவறி விழுந்து சிக்கிய வாலிபர், வெளியே வர முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம், காக்கிநாடா அருகில் உள்ள புதுச்சேரியின் பிராந்தியமான ஏனாம் கால்நடை மருத்துவமனை வீதியைச் சேர்ந்தவர் கீடா சிவசுப்ரமணியன் சிவா, 38; குடிப்பழக்கம் உடையவர். வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு சுற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, குடித்து விட்டு வீட்டின் மொட்டை மாடி பக்கவாட்டு சுவர் மீது படுத்திருந்தார். அப்போது நிலை தடுமாறி பக்கத்து வீட்டுக்கும் தன் வீட்டிற்கும் இடையே உள்ள சந்தில் தவறி விழுந்தார்.
இரு வீடுகளின் சுவர்களுக்கு இடையே 1 அடி அகலத்திற்கும் குறைவான இடைவெளி இருந்தது. இதில், நின்றபடி சிக்கி கொண்ட கீடா சிவசுப்ரமணியன் சிவா வெளியே வர முடியாமல் போராடி உயிரிழந்தார்.
இதனை பார்த்த பக்கத்து வீட்டினர் ஏனாம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரு வீடுகளின் சுவருக்கு இடையே சிக்கி உயிரிழந்த கிடந்த கீடா சிவசுப்ரமணிய சிவா உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.