மின்சார பேருந்து ஏலத்தில் அதானி நிறுவனம்
மின்சார பேருந்து ஏலத்தில் அதானி நிறுவனம்
மின்சார பேருந்து ஏலத்தில் அதானி நிறுவனம்
ADDED : பிப் 10, 2024 12:40 AM

புதுடில்லி,:அரசின், 3,600 மின்சார பேருந்துகளுக்கான ஏலத்தில் விண்ணப்பித்துள்ளதன் வாயிலாக, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் மின்சார பேருந்து பிரிவில் நுழைந்துள்ளது.
அரசுக்கு சொந்தமான 'கன்வர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் லிமிடெட்', 3,600 மின்சார பேருந்துகளுக்கான ஏலம் விடுத்துள்ளது.
நகரங்களுக்கிடையே இயக்கப்பட உள்ள மின்சார பேருந்துகளை வழங்குவதற்கான ஏலத்தில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் விண்ணப்பித்து உள்ளது.
அதானி நிறுவனம், இ.கே.ஏ., மொபிலிட்டியுடன் இணைந்து, 'பிரதான் மந்திரி இ --பஸ் சேவா' திட்டத்தின் கீழ், மொத்த ஒப்பந்த அடிப்படையில் மின்சார பேருந்துகளுக்கான கொள்முதல், வினியோகம், செயல்பாடு, பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஏலத்தில் கலந்துகொள்வதற்காக விண்ணப்பித்துள்ளது.