/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/குறுகலான இடத்தில் வாரச்சந்தை வியாபாரிகள், பகுதிவாசிகள் அவதிகுறுகலான இடத்தில் வாரச்சந்தை வியாபாரிகள், பகுதிவாசிகள் அவதி
குறுகலான இடத்தில் வாரச்சந்தை வியாபாரிகள், பகுதிவாசிகள் அவதி
குறுகலான இடத்தில் வாரச்சந்தை வியாபாரிகள், பகுதிவாசிகள் அவதி
குறுகலான இடத்தில் வாரச்சந்தை வியாபாரிகள், பகுதிவாசிகள் அவதி
ADDED : பிப் 09, 2024 08:21 PM

பொன்னை:வேலுார் மாவட்டம், வள்ளிமலை அருகே பொன்னை நதிக்கரையில் அமைந்துள்ளது பொன்னை நகரம். சோளிங்கரில் இருந்து சித்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து பொன்னைக்கு இணைப்பு சாலை உள்ளது.
இந்த இணைப்பு சாலையில், பொன்னை பேருந்து நிலையம் அருகே, வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது.
வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இங்கு சந்தை கூடுகிறது. அருகில் உள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இங்கு கடைகளை விரிக்கின்றனர். 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
மிகவும் குறுகலான இந்த சாலை இருவழிப் பாதையாக செயல்பட்டு வரும் நிலையில், சாலையை ஒட்டி இயங்கிவரும் வாரச்சந்தையால், மேலும் நெரிசல் அதிகரிக்கிறது. சந்தைக்கு வருபவர்கள் தங்களின் வாகனங்களை சாலையோரத்திலேயே நிறுத்துகின்றனர்.
சந்தைக்கு வரும் வியாபாரிகளின் கனரக வானங்களும் இங்கு நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், அப்பகுதிவாசிகள் மற்றும் பாதசாரிகள் போதிய இடவசதி இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். வாரச்சந்தை வளாகத்தை பாதுகாப்பான மற்றும் விஸ்தீரமான இடத்திற்கு இடமாற்றம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.