Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை கோட்டத்திற்கு சிறப்பு கேடயங்கள் கோட்ட மேலாளர் அலுவலர்களுக்கு பாராட்டு

மதுரை கோட்டத்திற்கு சிறப்பு கேடயங்கள் கோட்ட மேலாளர் அலுவலர்களுக்கு பாராட்டு

மதுரை கோட்டத்திற்கு சிறப்பு கேடயங்கள் கோட்ட மேலாளர் அலுவலர்களுக்கு பாராட்டு

மதுரை கோட்டத்திற்கு சிறப்பு கேடயங்கள் கோட்ட மேலாளர் அலுவலர்களுக்கு பாராட்டு

ADDED : பிப் 10, 2024 05:20 AM


Google News
மதுரை: ரயில்வே வாரவிழாவில்மதுரை கோட்டத்திற்கு சிறப்பு கேடயங்கள் வழங்கப்பட்டுள்ளது. பரிசு பெற்ற அலுவலர்களை மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா பாராட்டினர்.

இந்தியாவில் பம்பாய் -- தானே இடையே முதல் ரயில் போக்குவரத்தை 1853 ஏப்ரல் 16ல் துவக்கியது. இதனை கொண்டாடும் விதமாக ரயில்வே வார விழா சென்னையில் நேற்று கொண்டாப்பட்டது.

சிறப்பாக பணியாற்றியஊழியர்களுக்கு விருது,ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மதுரை கோட்டத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் சுபா, செல்வ சாஸ்தா, கட்டுமான பிரிவு பாலசுப்பிரமணியன், கணேஷ் குமார், ரயில் இயக்க ஊழியர் அந்தோணி ஆரோக்கியசகாயராஜ், குளத்து, கார்த்திக், அமைச்சுப் பணியாளர் முருகேசன், ஊழியர்நல ஆய்வாளர் பிரபாகரன், கண்காணிப்பாளர்ராதாகிருஷ்ண பாரதி ஆகியோருக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் விருதுகள் வழங்கினார்.

சிறப்பாக செயல்பட்ட மதுரை கோட்ட அலுவல் மொழி பிரிவு, தொலைத்தொடர்பு பிரிவு, ரயில்வே மருத்துவமனை ஆகியவற்றிற்கு சுழற் கேடயங்கள் வழங்கப்பட்டன.

மதுரை கோட்ட அலுவல் மொழி அதிகாரி சீனிவாசன், முதுநிலை கோட்ட தொலைதொடர்புபொறியாளர் ராம் பிரசாத்,ரயில்வே மருத்துவ கண்காணிப்பாளர் பிரியா சவுதினி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விருதுகள் பெற்ற ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா பாராட்டு தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us