கோலாருக்கு நிதி கிடைக்காது ம.ஜ.த., - எம்.எல்.சி., அதிருப்தி
கோலாருக்கு நிதி கிடைக்காது ம.ஜ.த., - எம்.எல்.சி., அதிருப்தி
கோலாருக்கு நிதி கிடைக்காது ம.ஜ.த., - எம்.எல்.சி., அதிருப்தி
ADDED : பிப் 10, 2024 06:13 AM

கோலார்: ''கோலார் மாவட்டத்திற்கு நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கையே இல்லை,'' என்று ம.ஜ.த., எம்.எல்.சி., கோவிந்தராஜு வருத்தம் தெரிவித்தார்.
கோலாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரசுக்கு மக்கள் பிரச்னைகள் பற்றி அக்கறையே இல்லை. மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகளை அணுகி கெஞ்ச வேண்டுமா. மக்கள் பிரச்னைகள் மீது கவனம் செலுத்துவதே இல்லை.
கோலார் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. தோட்டக்கலை உற்பத்தி பொருட்கள் மற்றும் விவசாய பயிர்கள் நாசமாகிறது. பயிர்களில் நோய் தாக்குவதை தடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்வதாக இல்லை. கோலார் மாவட்டத்திற்கு நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கையே இல்லை.
கால்நடை வளர்ப்பு தொழிலில் உள்ள விவசாயிகள் மிகவும் கஷ்டத்தில் உள்ளனர். இதுபற்றி அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் குரல் கொடுப்பதில்லை.
வறட்சி குறித்து அதிகாரிகளை கேட்டால் 47,757 விவசாயிகளுக்கு தலா 2,000 ரூபாயை வழங்கியதாக கூறுகின்றனர். இது போதுமானதா.
அடிப்படை வசதிகள் மேற்கொள்ள விசேஷ நிதி தேவை. அடுத்த வாரம் பட்ஜெட் கூட்டம் துவங்குகிறது. கோலார் மாவட்ட பிரச்னைகள் தொடர்பாக, மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.,க்களை அழைத்து மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆலோசனை நடத்தவே இல்லை.
லோக்சபா தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியால், எளிதில் வெற்றி பெற முடியும். காங்கிரஸ் அரசு மக்கள் விரோத அரசாக செயல் பட்டு வருகிறது. மக்கள் நலனுக்காக பா.ஜ., வுடன் இணைந்து ம.ஜ.த., போராட்டத்தில் ஈடுபடும்.
இவ்வாறு அவர் கூறினார்.