/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/திருப்பூர் 4வது குடிநீர் திட்டம் நாளை துவக்க விழாதிருப்பூர் 4வது குடிநீர் திட்டம் நாளை துவக்க விழா
திருப்பூர் 4வது குடிநீர் திட்டம் நாளை துவக்க விழா
திருப்பூர் 4வது குடிநீர் திட்டம் நாளை துவக்க விழா
திருப்பூர் 4வது குடிநீர் திட்டம் நாளை துவக்க விழா
ADDED : பிப் 10, 2024 01:13 AM
திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சியில் 'அம்ரூத்' திட்டத்தின் கீழ் 1,121 கோடி ரூபாய் மதிப்பிலான நான்காவது குடிநீர் திட்டம் துவக்கம்; திருப்பூர் ஒன்றியத்தில் 70.43 கோடி ரூபாய் மதிப்பிலான 65 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் துவக்கம், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் கட்டியுள்ள 54 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய மாநாட்டு அரங்கம் திறப்பு, 13 கோடி ரூபாய் மதிப்பிலான பல அடுக்கு வாகன நிறுத்தம் திறப்பு மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை(10ம் தேதி) நடக்கிறது.
திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி வளாகத்தில் காலை 9:00 மணிக்கு நடைபெறவுள்ள விழாவில் அமைச்சர் உதயநிதி இவற்றை துவக்கி வைக்கிறார்.
பின், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளை உதயநிதி பார்வையிட உள்ளார். துவக்க விழா ஏற்பாடுகள், சிக்கண்ணா கல்லுாரி வளாகத்தில் முழுவீச்சில் நடக்கின்றன.